எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.19 கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப் புள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஆறுகளின் குறுக்கே கட்டப் பட்டுள்ள அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் ஆலுவா, சாலக்குடி, செங்கானூர், ஆலப் புழா, பந்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் இருந்து ஏராளமானோரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 8-ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் 194 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேர் காணாமல் போயிருப்பதாக, மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

357 பேர் உயிரிழப்பு:

மாநிலத்தில் பருவமழை தொடங்கிய கடந்த மே மாதம் 29-ஆம் தேதி முதல் இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் 357 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்கள் அனைவரும் 2,000 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வெள்ள பாதிப் பினால் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, நிலைமையை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறார். மாநிலத் துக்குத் தேவையான மருந்துப் பொருள்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

முதல்வரின் அமெரிக்க பயணம் ஒத்திவைப்பு:

இதனிடையே, கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தனது அமெரிக்க பய ணத்தை ஒத்திவைத்துள்ளார். மருத்துவ சிகிச்சைப் பெறு வதற்காக, அவர் இன்று அமெ ரிக்கா செல்வதற்கு திட்டமிட் டிருந்தார்.

ஒடிசா வீரர்கள்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்காக, ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இருந்து தீய ணைப்பு படையைச் சேர்ந்த 240 வீரர்கள், கேரளம் விரைந்துள்ளனர்.

இதனிடையே, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மாநிலம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக் கூடும்; குறிப்பாக, திரு வனந்தபுரம், கொல்லம், காசர் கோடு ஆகிய மூன்று மாவட்டங் களைத் தவிர 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட் டுள்ளது. இதனால், அந்த மாவட் டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் அலு வலகம் வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner