எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஆக. 19- கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு, எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதால், அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு ராஜராஜேஸ் வரி நகரை சேர்ந்த பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி துப்பாக்கி யால் சுட்டு படுகொலை செய் யப்பட்டார். இதுதொடர்பாக சுஜித்குமார், பரசுராம் வாக் மோர், பரத் கூர்னி, ராஜேஷ் பங்காரா அமோல் காலே, கணேஷ் மிஸ்கின், அமித் ராமசந்திரா, அமித் டிக்வேகார் உள்பட 14 பேரை சிறப்பு விசாரணை குழு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இவர்களில் அமோல் காலே, கணேஷ் மிஸ்கின், அமித் ராமசந்திரா, அமித் டிக்வேகார் ஆகிய 4 பேருக்கும், தார்வாரில் கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப் பட்ட எழுத்தாளர் எம்.எம்.கல் புர்கி கொலையிலும் தொடர்பு இருப்பதை சிறப்பு விசாரணை குழு காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசா ரணை குழு காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள். அவ்வாறு விசாரித்தால் எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கில் முக்கிய துப்பு கிடைக்கும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

இதற்கிடையில், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதாகி உள்ள ராஜேஷ் பங் கேரா, பரத் கூர்னி ஆகியோர் பரசுராம் வாக்மோருக்கு துப் பாக்கி சுடும் பயிற்சி அளித்த தாக தெரிகிறது. அதாவது பரத் கூர்னிக்கு சொந்தமான பெல காவி மாவட்டம் ஜம்போடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து பரசுராம் வாக்மோருக்கு விதவிதமான துப்பாக்கிகளை கொடுத்து ராஜேஷ் பங்காரா பயிற்சி அளித்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தகவல் வெளி யாகி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner