எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சியில் இடைவிடாமல் மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் கொச்சி விமான நிலையம் கடந்த 14ஆம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் கொச்சி விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியாத நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை  விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி இன்று முதல் கொச்சி கடற்படை விமான தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கப் பட்டது. கடற்படை தளத்தில் முதல் வர்த்தக விமானம் இன்று காலை தரையிறங்கியது.