எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக. 22- வரலாறு காணாத அளவில் பெய்த கன மழையால் பேரழிவை சந்தித் துள்ள கேரளாவிற்கு பல பகுதி களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அவ்வகையில் அய்க்கிய அரபு அமீரகம், கேர ளாவுக்கு உதவ முன்வந்தது. தங்களது வெற்றியில் கேரள மக்களுக்கு எப்போதும் பங்கு உள்ளதாக கூறிய அய்க்கிய அரபு அமீரக துணை அதிபர், கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்று தெரிவித்தார். இதற்காக சிறப்பு குழுவை அமைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கேரள முதல் வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு அய்க்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

நிவாரணப்பணிகள், மறு வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பாக விவாதிப் பதற்கு, ஆகஸ்ட் 30ஆ-ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட் டத்தை கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்தி ருப்பதாகவும் பினராயி விஜ யன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner