எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,  ஆக.22 நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதன் மூலம் தெற்காசியாவில் ராணுவ பலத்தில் முன்னிலையில் உள்ள நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சுமார் 20 ஆண்டுகள் இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த ரக ஏவுகணை தயாரிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஏவுகணை சோதனையை இந்தியா மிகவும் ரகசியமாக மேற்கொண்டது. இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுத ஏவுகணையை செலுத்தும் திறனுடைய நாடுகளில் 6ஆவதாக இந்தியா இணைந்துள்ளது.

கடந்த 11,12ஆம் தேதிகளில் அய்என்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் இருந்து இரு முறை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இது 750 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும். இதன் எடை 10 டன் ஆகும். இதனை எதிரி நாட்டு தடுப்பு ஏவுகணைகள் கண்டறிந்து தடுப்பதும் கடினம்.

இதனிடையே, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கவல்ல அதிநவீன வெடிகுண்டு மற்றும் பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணை ஆகியவை, ராஜஸ்தானில் உள்ள ராணுவ தளங்களில்  வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

இவை இரண்டுமே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப் பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சந்தன் பகுதியில் உள்ள ராணுவத் தளத்தில், போர் விமானத்தில் இருந்து செலுத்தப்பட்டு, அதிநவீன வெடிகுண்டு சோதிக்கப்பட்டது. எதிரி நாட்டு விமானப் படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆயுதமாக பயன்படுத்தக் கூடிய இந்த வெடிகுண்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக அழித்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணையான

“ஹெலீனா’, பொக்ரான் ராணுவ தளத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக் கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner