எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.22 ரயில்வே பாலங்களை மூன்றாம் நபர் குழுவைக் கொண்டு ஆய்வு செய் யுமாறு அனைத்து மண்டலங் களுக்கும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையின் அந்தேரி நகரில் உள்ள ரயில்வே பாலம் கடந்த மாதம் 3-ஆம் தேதி உடைந்து சேதம் அடைந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, முதல் முறையாக, ரயில்வே பாலங்களை மூன்றாம் நபர் குழு வைக் கொண்டு ஆய்வு செய்வ தற்கு ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறிய தாவது:

ரயில்வே பாலங்களை ஆய்வு செய்வதற்கு தற்போது பின்பற்றப் பட்டு வரும் நடைமுறையே போதுமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், சில இடங்களில் பாலங்கள் உடைந்து சேத மடைந்து விபத்துகள் நேரிட் டுள்ளன. இந்த நிலையில், பாலங்களை ஆய்வு செய்யும் பொறுப்பை சுதந்திரமான ஓர் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து ரயில்வே மேம்பாலங்கள், நடை மேம்பாலங்கள், 80 ஆண்டுகள் பழமையான ரயில்வே மேம் பாலங்கள் ஆகியவற்றை மூன் றாம் நபர் குழு ஆய்வு செய்ய வுள்ளது.

இதற்கான செயல் திட்டத்தை 15 நாள்களில் வகுக்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

அந்தேரி ரயில்வே பால விபத்துக்குப் பிறகு, மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உதவியுடன் 445 ரயில்வே பாலங்களை ஆய்வு செய்யுமாறு ரயில்வே துறைக்கு அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டார்.

எனினும், மூன்றாம் நபர் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அய்அய்டி அல்லது என்அய்டி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவ னத்தைச் சேர்ந்தவர்களின் உதவி யுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

நாடு முழுவதும் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 37,162 ரயில்வே பாலங்கள் உள்ளன. அண்மையில், ரயில்வே பாலங் களின் நிலையை நாடாளு மன்ற நிலைக் குழு விமர்சித்திருந்தது.

சுந்திரத்துக்குப் பிறகு கட்டப் பட்ட பாலங்களை விட ஆங்கி லேயர் காலத்தில் கட்டப்பட்ட சில ரயில்வே பாலங்கள் நல்ல நிலையில் இருப்பதாக அந்தக் குழு குற்றம் சாட்டியிருந்தது. அதிகாரிகளும், ஒப்பந்ததாரர் களும் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்வதால்தான் உறுதியான பாலங்களை கட்ட முடிவதில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்தி ருந்தது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner