எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொச்சி, ஆக.23  கேரளத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் கடந்த 14 நாள்களாக கடற்படை சார்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இதில் மழை, வெள் ளத்தில் சிக்கியிருந்த 16,005 பேரை மீட்டுள்ளோம். மீட்புப் பணிகள் தொடர்பான கோரிக்கைகள் வராததை அடுத்து பணிகளை முடித்துக் கொள்ள கடற்படை முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை தவிர ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் துணை ராணுவப் படையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதனிடையே, மழை, வெள்ளத் தால் சாலைகளில் விழுந்த மரங் களை அப்புறப்படுத்துவது உள் ளிட்ட சீரமைப்புப் பணிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை யைச் சேர்ந்த 40 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மழையால் அதிக பாதிப்பைச் சந்தித்த திருச்சூர் மாவட்டத்தில் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அவர் கள் பணியாற்றி வருகின்றனர்.

வங்கிகள் சலுகை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்பச் செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதேபோல் வாடிக்கையாளர் களுக்கு கட்டணமின்றி புதிய காசோலைகளும் வழங்கப்படும். டெபிட் கார்டுகளை திரும்ப வழங்க கட்டணம் கிடையாது என்பது உள்ளிட்ட சலுகைகளை வங்கிகள் அளித்துள்ளன.

மழை வெள்ளத்தில் 323 வங்கிக் கிளைகளும், 423 ஏடிஎம் களும் மூழ்கின. இவற்றில் 162 வங்கிக் கிளைகள் புதன்கிழமை மீண்டும் பணிகளைத் தொடங்கி யுள்ளன. 82 ஏடிஎம்கள் சரி செய்யப்பட்டுவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் தேசிய நிவாரண நிதி, கேரள முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நன்கொடை அளிக்கும் தொகைக்கு வரி கிடையாது என்று என்று அறிவிக் கப்பட்டுள்ளது. தொண்டு நிறு வனங்கள் மூலம் கேரளத்துக்கு வெள்ள நிவாரணம் அளித்தால் வருமான வரியில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்” என்று மத்திய உள்துறை இணை யமைச் சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள் ளார்.

கொச்சி விமான நிலையம்: மழையால் கடுமையாக பாதிக் கப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் 29-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 26-ஆம் தேதியே அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது. மழையால் ஓடுதளம் மூழ்கியதால் கடந்த 15-ஆம் தேதி முதல் கொச்சி விமான நிலையம் செயல்படவில்லை.