எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக.24- கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இனிகா. முதிய வரான இவர், தேநீர் மற்றும் பரோட்டா கடை வைத்திருக் கிறார். மிகவும் நல்ல மனிதர் என்று அந்தப் பகுதியில் பெயரெடுத்தவர். தனது சிறிய கடையில் மதியம் 10 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு சாப்பாடு தருகிறார். 50 ரூபாய்க்கு நல்ல சிக்கன் வருவல் விற்பனை செய்கிறார்.

10 ரூபாய் சாப்பாடு என்பது அளவு இல்லாத சாதம் ஆனால் யாராவது சாதத்தை மிச்சம் வைத்தால் அவரிடம் 50 ரூபாய் தண்டம் வாங்கி விடுவார். இப்படிப்பட்டவருக்கும் மோடியால் சோதனை வந்தது.பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம் பர் 8-ஆம் தேதிபணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்த போது இனிகா கையில் 23 ஆயிரம் ரூபாய்இருந்துள்ளது. அதை, எல்லோரையும்போல இனிகா வங்கிக்குச் சென்று மாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் வரிசையில் நின்று.. நின்று.. ஒருகட்டத்தில் மயங்கியே விழுந்து விட்டார். இதனால் கடும் அதிருப்திக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளான இனிகா, தான்வைத்திருந்த 23 ஆயிரம் ரூபாயையும் மாற்றா மல், தீயில் போட்டு எரித்து விட்டார். தொடர்ந்து தனது மீசையை ஒரு புறமும், தலை யில் பாதியையும் மழித்துக் கொண் டார். இப்போதுவரை மீண்டும் அவர் ஒரு பகுதியில் முடிவளர்க்கவில்லை. மோடி ஆட்சி முடிவுக்கு வரும்போது தான் மீசையையும், தலை முடியையும் வளர்ப்பேன் என்று இப்போது வரை வைராக்கியமாக வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல, மோடி அறிமுகப்படுத்திய 2000 ரூபாய் நோட்டை கையால் தொடுவதில்லை என்றும் உறுதி யுடன் இருந்து வருகிறார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner