எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஆக.24 பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தில் உள்ள தாமோதர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிம்லேஸ் ஷா (20). இவர் கடந்த 19ஆ-ம் தேதி திடீரென காணாமல் போனதால் அந்த ஊர்மக்கள் இவரை தேடி திரிந்துள்ளனர்.

இதற்கிடையே, அதே மாவட்டத்தில் உள்ள பியா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே இளை ஞர் ஒருவரின் உடல் அடுத்த நாள் 20-ஆம் தேதி கைப்பற் றப்பட்டது. அந்த சடலம் காணாமல் போன பிம்லேஸ் ஷா தான்  என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இத னால் ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள், பிம்லேஸ் ஷாவை அந்த பகுதியில் வசிக்கும் விபச்சார கும்பல்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதினர். அதிலும் குறிப்பாக ஒரு பெண் மீது சந்தேகப்பட் டனர். இதையடுத்து அங்கு சென்ற கிராம மக்கள், அந்த பகுதியில் இருந்த கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

பின்னர் சந்தேகப்பட்ட பெண்ணை அடித்து தாக்கிய மக்கள் அவரை நிர்வாணமாக்கி அந்த பகுதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தெரு தெருவாக இழுத்துச்சென்ற சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த விவ காரம் குறித்து 4 வார காலத் திற்குள் விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம் பீகார் அரசுக்கு தாக்கீது நேற்று அனுப்பியுள் ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும் பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு வழங்க அம்மாநில காவல் துறை டி.ஜி.பி.க்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner