எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முக்கிய சிக்கல்!: கருநாடகாவிலுள்ள நம்மில் பலரும் இதைப்பற்றிப் பேசவில்லை. இங்கு நடக்கும் செய்திகள் எந்த அளவுக்கு, என்ன விவரங்களுடன், வெளிமாநில ஊடகங்களில் வெளிவருகிறது என்பது நமக்குத் தெரியாமல் இருக்கிறோம். வரு கின்ற ஆகஸ்ட்  30ஆம் தேதி பேராசிரியர் எம்.எம். கல்புர்கியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளும் அதைத் தொடர்ந்து, செப் டம்பர் 5ஆம் தேதி கவுரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாளும் வரு கின்றது.

மேற்கண்ட இரண்டு படுகொலைகளைப் பற்றிய உண்மைகளையும் நம் நினைவுத் துளைகளில் நாம் நழுவவிட்டிருக்கலாம். அதாவது, சிறப்புப் புலனாய்வுக் குழு, கவுரி லங்கேஷ் படுகொலையில் பலரைக் கைது செய்தது. கைதானவர்களில் ஒருவனான, விஜயபுராவைச் சேர்ந்த பரசுராம் வாக்மரே, தான்தான் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டான். கிடைத்த ஒவ்வொரு தொடர்புகளையும் பிடித்துக்கொண்டு நகர்ந்ததில், சிறப்புப் புலனாய்வுக் குழு, வழக்கைத் திறமையாக வெளிக் கொண்டுவந்தது. ஒவ்வொருநாளும் செய்தித் தாள்களில் விரிவாக வெளியிடப் பட்ட கதைகள் நடுங்க வைப்பன. அன்றாடம்  வெளிவந்த உறுதியான ஆதாரங்கள் இல்லையென்றால் இவையெல்லாம் ஏதோ டான் பிரவுன் எழுதிய சிறந்த க்ரைம் கற்பனைக் கதை என்று நினைத்து மறந்து விடலாம். ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் வாழும் நம்மிடையே, இந்துத்துவாவை தீவிரமாக விமர்சிக்கும் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களை, கவனமாகத் திட்டமிட்டு, கொடூரமாகக் கொலை செய்யும் வலதுசாரிகளும் இருக்கிறார்கள்!

வெளிவராத  செய்தி என்னவென் றால், இந்தப் பச்சைப் படுகொலைகளை செய்வதற்கென்றே,   இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் திறமையான கொலை பொறியமைப்பை (ரிவீறீறீவீஸீரீ விமீநீலீணீஸீவீsனீ) உருவாக்க ‘உயரடுக்கு’ வலதுசாரி சிந்தனையாளர்களால் முடிவு செய்யப் பட்டுள்ளது என்பதுதான்! இந்த, முறையான திட்டமிடலில் முதற்கட்டமாக, கொலை காரர்களையும் அவர்களுக்கு துணை புரிபவர்களையும் பணியமர்த்தவிருக்கி றார்கள். இதற்காக, இந்துத்துவா நிகழ்ச்சி களில் கலந்துகொள்ளும் அர்ப்பணிப்பும், துடிப்புமுள்ள இளைஞர்களை கண்டறிந்து அணுகுகிறார்கள்.

கவுரி கொலை வழக்கில் தொடர்புடை யவனும் இந்துத்துவா விழிப்புணர்வு கூட் டங்களில் கலந்து கொண்ட ஆயிரக்கணக் கான பேர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிலரில் ஒருவன் ஆவான். இப்படித் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள்  மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும், விவாதங்களுக்கும் அழைக்கப்படுவர்.

இரண்டாம் கட்டமாக, மூளைச்சலவை செய்தல். கவுரி லங்கேஷைக் கொலை செய்த, வாக்மரேவுக்கு கவுரியின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ காண்பிக்கப்பட்டது. “அதைப் பார்த்து என் ரத்தம் கொதித்தது’’ என்று அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான். பிறகு அவன், படிப்படியாக கவுரியைத் ‘தண்டிக்க’ ஊக்கப்படுத்தப்பட்டான். தேர்வு செய்யப்பட்டவர்கள் இப்படி ‘அறிவுரை’ வழங்கப்பட்டபின்  அடுத்தகட்டம் தொடங் கும். அடர்ந்த காடுகளில் முன்னாள் காவல் துறையினர் மற்றும் தொழில்முறை New துப்பாக்கி சுடுபவர்களைக் கொண்டு, கைத்துப்பாக்கியில் சுடுவதற்கான பயிற்சி கொடுக்கப்படும். இதனால் குறி தவறாமல் சுடும் திறமையைப் பெறுகிறார்கள்.

இந்த ஆயுதங்கள் இவர்களுக்கு எங்கி ருந்து வருகின்றன? கவுரி வழக்கை விசாரித்த, சிறப்புப் புலனாய்வுக்குழு கண்டறிந்தபடி, கருநாடகாவிலுள்ள  ஒருவர் கட்டியுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட ஒரு உண் மையான கோட்டை! மிகவும் மரியாதையான அந்த மனிதர், ஒரு ஆயுத வியாபாரி என்று தெரியவந்தபோது அந்த மரியாதை மாறியது! வெவ்வேறு இந்திய மொழிகள் பேசுபவர்கள் அவருடைய கிராமத்தில், அந்தக் கோட்டைக் குச் சென்று வருவதை அந்த கிராம  மக்கள் கவனித்ததாக, செய்தித்தாள்கள் கூறுகின்றன.

மேலே சொன்ன, மிகவும் அபாயகரமான விவரங்கள், கிரைம் கதைகளில் (அகதா கிறிஸ்டி, ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் கதைகளை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்) வருவதைப் போல, மிகவும் நடுங்க வைக்கிறது. கோவா வில், மிகவும் பிரபலமான இந்துத்துவா அமைப் புகளுக்கிடையே வாழும் சாதாரண மக்களும் இதையே சொன்னார்கள். உள்ளூர் மக்களே போக முடியாத இடத்திற்குக் கூட, வெளியாட் களும், புதியவர்களும், உள்ளூர் மொழி பேசாதவர்களும் போய் வருவதாக அவர்க ளும் கூறினார்கள். கிரிமினல் வலைப் பின் னல்கள் ‘தேசியம்‘ என்ற பெயரோடு இயங்குகின்றன. இதுபோன்ற குழுக்கள், இந்தியாவெங்கும் இயங்குகின்றன என்பது தெளிவாகிறது. இளைஞர்கள் (இயல்பாகவே, சூத்திரர்களும் சில தலித் துகளும்) அன்றாடம் தேர்வு செய்யப் பட்டு கொலைக் கூடங்களில் பயிற்சியளிக் கப்படுகிறார்கள்.

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், தீவிர இந்துத்துவா விமர்சகர்கள்  ஆகியோரின் பெயர்ப்பட்டியலை குற்றவாளிகள் பரிமாறிக்கொண்டதையும் சிறப்புப் புலனாய்வுக்குழு கண்டறிந்திருக்கிறது. இதன்மூலம் எந்த அறிவு ஜீவியை  யார் கொல்வது என்பது தெளிவாகும். அடுத்ததாக, திட்டமிடுதலும் ஒத்திகையும் நடைபெறும். கூடவே, சமுதாயத்தில் மதிப்புள்ள, பொது குடிமகன், கொலை யாளிகள் தங்குவதற்கு இடமும் உணவும் அளிக்க வேண்டும். கவுரி கொலையாளி களுக்கு ஒரு டாக்டர்தான் தன்னுடைய கிளினிக்கில் தங்குவதற்கு இடம் கொடுத் தார். கொலையாளிகளுக்கு மோட்டார் பைக் எப்படிக் கிடைத்தது என்பது போன்ற விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், கிரைம் எழுத்தாளர்களின் பிழைப்பைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

இது நம்மை எங்கே கொண்டு செல்லும்? மதச்சார்பின்மை, கருத்துரிமை, ஆகியவை பற்றியத் தீவிரமான விவா தங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எல்லாம் உங்களையும் என்னையும் போன்ற முட்டாள்களின் மூளையற்றவர்களின் நுகர்வுக்காகத்தான். இவையெல்லாம், இந்தியாவில் வலதுசாரிகளின் அரசு மற்றும் தரகு முதலாளித்துவத்தின் திசைதிருப்பி, ‘பொறி’யில் மாட்டிவிடும் யுக்தியாகும். ஏன்? இதன்மூலம், இந்தியா முழுதும் பரந்துவிரிந்த கொலை வலைப் பின்னலை விரிக்க முடியும். இறுதித் தீர்வை நடைமுறைப்படுத்த செய்ய வேண்டிய திட்டங்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டன. ‘கொல் லுங்கள் அவர்களை’. தேர்வு செய்யப் பட்ட கொலையாளிகள் தடயங்கள் இல்லாமல் மறைந்துகொள்வதற்கான விரிவான கட்டமைப்பு இந்தியாவெங்கும் செயல்படுகிறது. நீங்கள் சாதாரணமாக ஒரு தெருவில் நடந்து செல்லும்போது கண்ணுக்குத்தெரியாத சிலர் உங்களை கண்காணிக்கிறார்கள். ஓர் அமைதியான ஞாயிறு காலையில் அல்லது மாலையில் ஒரு மோட்டார் பைக் காத்திருக்கிறது. அதில் இரண்டு நெருங்கிய பழக்கம் உள்ளவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவன் உங்களை மிக அருகில் குறிபார்த்து சுடுகிறான். மற்றவன் உடனடி யாக வண்டியை வேகமாக ஓட்டுகிறான். அதாவது அவர்களுடைய பட்டியலில் நீங்கள் இருந்தால்....‘Dial H for murder’.

படுகொலை நடந்த ஓராண்டு முடிந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்து, செப் டம்பர் 5ஆம் தேதிவரை கருநாடகாவில் ‘வழமையில்லா கிழமை’ (Unusual Week) கடைபிடிக்கப்படவிருக்கிறது. சுதந்திரத் துக்குப் பிந்தைய இந்தியாவில் நடந்த மிக அதிர்ச்சிகரமான கொலைகளுக்குப் பின்பும் கேளாக்காதினராக இருக்கும் நிலையைத்  தகர்க்க வேண்டும். கருநாட காவில்,   இந்திய ஜனநாயகத்துக்கும் அர சியலமைப்புக்கும் எதிரான பெரிய குற்றத்தை சிறப்புப் புலனாய்வுக்குழு தோண்டியெடுத்துக் காட்டியிருக்கிறது. இந்தியாவின் விளிம்புநிலை மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றிய அறியாத ஒருவரை இந்தியாவின் மிக வலிமையான ஆண் என்று ஒருவர் பரிந்துரைத்தபோது நான் சிரித்தே செத்து விட்டேன். விளிம்புகள்தான் ‘மய்யம்‘ என்பதை வரையறை செய்கின்றன. அதாவது விளிம்புகள்தான் மய்யங்கள்.

குறிப்பு: வாசகர்களே, மேலே சொன் னவையெல்லாம் டிஸ்டோபியன் கதைக ளிலிருந்து எடுக்கப்பட்டவையல்ல. அனைத்தும், கவுரி லங்கேஷ் கொலை பற்றிய சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் வெளியிடப்பட்டவை.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner