எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜகார்த்தா, ஆக. 25  ஆசியப் போட்டியில் 6-ஆவது நாள் இந்தியாவுக்கு தங்கத் திருநாளாக அமைந்தது. டென்னிஸ் இரட் டையர் மற்றும் ரோயிங் (படகுப் போட்டி) தங்கப் பதக்கம் வென்றனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் 18-ஆவது ஆசியப் போட்டிகள் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலை யில் 6-ஆவது நாளான வெள்ளிக் கிழமை இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்தது. டென்னிஸ் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண் ணா-டி விஜ் சரண் இணை 6-க்கு3, 6-க்கு4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர்-டெனிஸ் எவஸ்வ் இணையை வீழ்த்தி தங்களின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர். இரு வரும் சிறப்பாக ஆடி 52 நிமிடங்களில் கஜகஸ்தான் இணையை வென்றனர்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் பிரஜ்னேஷ் குணேஸ் வரன் 2க்கு-6, 2க்கு-6 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினிடம் தோல்வியுற்று வெண்கலம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்.

கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு பின் தற்போது இந்திய இணை இரட்டையர் பிரிவில் மீண்டும் தங்கத்தை வென்றுள்ளது. தனக்கு சிறந்த இரட்டையர் இணையை ஒதுக்காததால் அதிருப்தியுடன் மூத்த வீரர் லியாண்டர் பயஸ் விலகிய நிலையில் ரோஹன் போபண்ணா-டிவிஜ் சரண் இணை தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது. கடந்த 2014-இல் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண் கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றி இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner