எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஆக. 28- கேரளா, உத் தரப்பிரதேசம், மேற்கு வங்கா ளம் உள்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள் ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 993 ஆக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மிகப்பெரிய பேர ழிவை சந்தித்துள்ள கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு அடுத்தபடியாக உத்த ரப்பிரதேசத்தில் 204 பேர், மேற்கு வங்காளத்தில் 195 பேர், கருநாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் முறையே 161 பேர் மற்றும் 46 பேர் வெள்ளம் தொடர்பான பேரிடரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலங்கள் ஒவ் வொரு இயற்கைப் பேரழிவுக் கும் பின்னர் நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்களில் பேரிடர்கால ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு என தனி யாக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறி வுறுத்தியுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner