எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.30 இடதுசாரி மற்றும் மாவோயிஸ்ட் ஆதரவாளர் களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், ‘‘புகார் தெரிவிப்பவர்களை சுட்டுத்தள்ளி விடுங்கள்’’ என்று மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி கடும் கண் டனம் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டதாக கூறி  மும்பையில் சமூக ஆர்வலர் வெர்னோன் கோன்சேல்வ்ஸ், தானேவில் அருண் பெரைரா ஆகியோர் கைது செய்யப் பட்டனர். டில்லியில் மனித உரிமை ஆர்வலர் கவ்தம் நவ்லாகா, அரியானாவில் தொழிற்சங்க பிரதிநிதி சுதா பரத்வாஜ், அய்தராபாத்தில் கவிஞர் வரவரராவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவில் ஆர்எஸ்எஸ் என்ற தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமிருக்கிறது. மற்ற தொண்டு நிறுவனங்களை மூடிவிடலாம். அனைத்து சமூக ஆர்வலர் களையும் சிறையில் அடைப்பதுடன், புகார் தெரிவிப்பவர் களை சுட்டுத்தள்ளிவிடலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார ஆட்சியை நோக்கி

இந்தியா செல்கிறது - லாலு

நேற்று பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் லாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: மாவோயிஸ்ட்டுடன் தொடர்பு இருப்பதாக கூறி சிலர் கைது செய்யப்பட் டுள்ளனர். பிரதமர் உயிருக்கு மிரட் டல் வந்ததை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நெருக்கடி கால நடவடிக்கை போல் தோன்றுகிறது. சர்வாதி கார ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

சீதாராம் யெச்சூரி

இதேபோல் இச்சம்பவம், ‘‘ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீதான கொடுமை யான தாக்குதல்’’ என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கண் டனம் தெரிவித்துள்ளார்.