எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.31 பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்க மான தொழிலதிபர்களுக்கு உத வும் நோக்கத்திலேயே, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார். இது ஒரு திட்ட மிடப்பட்ட ஊழல் என்றும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக, டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடி  தன்னுடைய நெருங்கிய தொழிலதிபர்களான 15 முதல் 20 நபர்களுக்கு உத வும் விதமாகவே பணமதிப் பிழப்பு நடவடிக்கையை மேற் கொண்டார். இந்த நடவடிக்கையின்போது பிரதமரின் நண் பர்கள் கருப்புப் பணத்தை வெள் ளையாக மாற்றி விட்டனர்.

பணமதிப்பிழப்பு என்பது மாபெரும் ஊழலே தவிர வேறல்ல. அதற்கான ஆதா ரங்கள் மெல்ல மெல்ல வெளி வந்து கொண்டிருக்கின்றன. பணமதிப்பிழப்பு என்பது தற்செயலான தவறு அல்ல. அது திட்டமிடப்பட்ட திணிப் பாகும்.

கடந்த 70 ஆண்டுகளில் எவராலும் செய்ய முடியாததை தமது அரசு செய்து முடித்துள் ளதாக பிரதமர் மோடி கூறுவது சரிதான். அதை ஏன் செய்தார் என்பதை அவர் விளக்க வேண் டும்.

முந்தைய அய்க்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகளின் வாராக் கடன் தொகை ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது. அது தற் போது ரூ.12.5 லட்சம் கோடி யாக உயர்ந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் பொருளாதாரம் மோச மாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால், பொருளாதார வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் குறைந்ததுடன், கோடிக்கணக் கானோரின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து நாட்டின் இளைஞர்களுக்கு மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner