எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.31  மக்களவை மற்றும் அனைத்து சட்டப் பேரவைகளுக்கும்  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்துக்கு சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனினும், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப் படுவதற்கு முன்பு, விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசிடம் சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:

நாடு தொடர்ச்சியாக தேர் தலை எதிர்கொள்ளும் விவகாரத் துக்கு, மக்களவை மற்றும் அனைத்து சட்டப் பேரவை களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஒன்றே தீர்வாக இருக் கும். எனவே, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையை தவிர்த்து பிற அனைத்து சட்டப் பேர வைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் பட வேண்டும்.

இதேபோல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், பொது மக்களின் வரிப்பணத்தை வீணாக் காமல் சேமிக்க முடியும். அரசு நிர்வாகம், பாதுகாப்பு படை களுக்கு இருக்கும் சுமையை குறைக்கவும் உதவியாக இருக் கும். அரசின் கொள்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படு வதை உறுதி செய்யவும் முடியும்.

மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அரசு நிர்வாகமானது, தேர்தல்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, வளர்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தற்போதைய வடிவின் படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. எனவே, மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக, அந்த இரு அவைகள் தொடர்பான சட் டங்களிலும், அந்த இரு அவை களையும் கூட்டுவது தொடர்பான சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3 வழிகளில், இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். முதலாவதாக, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, 12 மாநில சட்டப் பேரவைகள், 1 யூனியன் பிரதேச சட்டப் பேரவை (மொத் தம் 13 சட்டப் பேரவை) ஆகிய வற்றுக்கு தேர்தல் நடத்தலாம். அதாவது, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 2019ஆம் ஆண்டில் ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, சிக்கிம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கருத் தொற்றுமை ஏற்படும்பட்சத்தில், அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், மத் தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டப் பேரவைகளுக்கும், டில்லி யூனியன் பிரதேச சட்டப் பேர வைக்கும் தேர்தல் நடத்தலாம்.

எஞ்சிய 16 மாநில சட்டப் பேரவைகளுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவைக்கும் 2019ஆம் ஆண்டில் தேர்தல் நடத்துவது சாத்திய மில்லை, எனவே இவற்றுக்கு 2021ஆம் ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தலாம். அந்த சட்டப் பேரவைகளின் பதவிக்காலத்தை 2024ஆம் ஆண்டு வரை மட்டுமே இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால், 2024ஆம் ஆண்டில் மக்களவைக் கும், அனைத்து மாநில சட்டப் பேரவைகள், யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்.

இரண்டாவதாக, மக்களவை யுடன் சேர்த்து 12 சட்டப் பேர வைகள், 1 யூனியன் பிரதேச சட்டப் பேரவைக்கு 2019ஆம் ஆண்டில் தேர்தல் நடத்த வேண்டும். எஞ்சிய 16 மாநில சட்டப் பேரவைகள், 1 யூனியன் பிரதேச பேரவை ஆகியவற்றுக்கு 2021இல் தேர்தல் நடத்த வேண் டும். இப்படி செய்தால், 5 ஆண்டில் 2 முறை மட்டுமே தேர்தல் நடத்த வழிவகை ஏற்படும்.

மூன்றாவதாக, மேற்கண்ட 2 வழிகளிலும் தேர்தல் நடத்த முடியாமல் போகும்பட்சத்தில், ஒரே ஆண்டில் மக்களவையுடன் சேர்த்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். இதற்காக, மக்களவை மற்றும் அனைத்து சட்டப் பேரவைகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட ஆணையத்தின் அறிக்கை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சட்ட ஆணையத்தின் பரிந்து ரைகள் குறித்து கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டுள் ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner