எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், செப்.3 படேல் சமூகத் தினருக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக குஜராத்தில் பட்டினிப் போராட்டம் இருந்துவரும் ஹர்திக் படேல், தன்னுடைய உடல்நிலை மோசமானதையடுத்து உயில் எழுதி யுள்ளார்.

குஜராத்தில் சிறுபான்மையினராக உள்ள படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, அகமதாபாத்தில் கடந்த 9 நாட்களாக, படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். அவரது உடல்நிலை மோச மடைந்துள்ளதாகவும், அவர் உடனடி யாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே, தான் உயிரிழக்கும் பட்சத்தில் தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சென்று சேரவேண்டும் என்று ஹர்திக் உயில் எழுதியுள்ளார். அதன் படி, வங்கியில் உள்ள ரூ.50 ஆயிரத்தில் ரூ20 ஆயிரம் அவருடைய பெற்றோர் களுக்கும், மீதமுள்ள தொகை குஜராத் தில் தனது கிராமத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் பசுக்களின் வாழ் விடமான ‘பஞ்ச்ரபோல்’ இல்லத்திற்கு சேர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல, பதிப்பிற்கு தயாராகி யுள்ள தனது ‘Who took my job’ புத்தகம் மூலம் கிடைக்கும் ராயல்டி, இன்சூ ரன்ஸ் தொகை, அவருடைய காரை விற்று கிடைக்கும் தொகை ஆகியவற் றில், 15 சதவிகிதம் அவருடைய பெற் றோருக்கும், 15 சதவிகிதம் சகோதரிக்கும் மற்றும் மீதமுள்ள 70 சதவிகிதம் கடந்த 2015இல் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 14 படேல் சமூகத்து இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் சென்று சேர வேண்டும் என்று அவர் தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள் ளார். இதனிடையே, பட்டினிப் போராட்டம் மேற்கொண்டுள்ள ஹர்திக் படேலை நேரில் சென்று பார்க்க விரும் பும் அவரது ஆதரவாளர்களை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner