எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், செப். 5- கேரளா வில், வெள்ள பாதிப்பு காரண மாக, ஓராண்டுக்கு, அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் எதை யும் நடத்தப்போவதில்லை என்றும், அவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மாநில அரசு அறிவித்துள்ளது.

அண்டை மாநிலமான கேர ளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.சமீபத்தில் இங்கு பெய்த கன மழையால், மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நூற்றுக் கணக்கானோர் பலியாயினர்; காணாமல் போன பலரை தேடும் பணி நடந்து வருகிறது.பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துகள் நாசமானதால், அவற்றை புனர மைக்கும் பணியில், மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஓராண்டுக்கு, அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து, மாநில அரசு உத் தரவிட்டுள்ளது. அதற்காக செல வழிக்கப்படும் தொகையை, புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த, அரசு திட்டமிட் டுள்ளது. இது குறித்து, மாநில நிதியமைச்சர், தாமஸ் அய்சக் கூறியதாவது:

கேரளாவில் பெய்த வர லாறு காணாத கன மழையால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தை சீரமைக்க, 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப் படுகிறது. இதுவரை, வெள்ள நிவாரண நிதியாக. 1,026 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கேர ளாவில் இந்த ஆண்டு நடக்க விருந்த, சர்வதேச திரைப்பட திருவிழா ரத்து செய்யப்படு கிறது. அதே போல், இளைஞர் திருவிழாவும் நடத்தப்படாது.அனைத்து அரசு நிகழ்ச்சிகள், விழாக்களும், ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டு, அதற்கான செலவழிக்கப்படும் தொகை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப் படும். அதன் மூலம், வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிக ளில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ் வாறு அவர் கூறினார்.