எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செப். 10 முழு அடைப்புக்கு காங்கிரசு அழைப்பு

சென்னை, செப். 7-- பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்ட ருக்கு ரூ. 50 ஆக விற்பனை செய்யப்படும் எனபாஜக வாக் குறுதி அளித்தது. ஆனால் தற் போது விலை உயர்வுக்கு வேறு காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக செயல்பட்டு மத்திய அரசு, மக்கள் விரோ தப்போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, இந்தியாவில் குறைக்காமல், அதன் பயனை மக்களுக்குத் தராமல் வரியை உயர்த்தியது.இதன் மூலம் மத்திய அரசு ஏற்கெனவே பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இப்போது, பெட்ரோலியப் பொருள்களின் விலை உச்சத் தில் உள்ளது. சர்வதேச காரணி களால் விலை உயர்ந்து விட்ட தாக மத்திய அரசு கூறி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி வருகிறது. இந்த கடும் விலை உயர்வால் சாமானிய மக்கள், நடுத்தரப் பிரிவினர், விவசாயிகள், சிறு வணிகர்கள், போக் குவரத்து தொழிலை சார்ந்து இருப்பவர்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் வலியுறுத்துகின்றன. ஆனால் இதற்கு பாஜக அரசு செவி மடுக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை யில் வியாழனன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற் றைய விலையை விட 21 காசு கள் உயர்ந்து ரூ.82.62 காசுகளா கவும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்கள் தலை யில் இடியை இறக்கி, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. டீசல் மீதான கலால் வரி 2014-ஆம் ஆண்டில் ஒரு லிட்டருக்கு ரூ.3 .46 ஆகஇருந்தது. இப்போது, ரூ.15.33 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆட்சியில் மத் திய கலால் வரி 12 முறை அதி கரிக்கப்பட்டுள்ளது. இவை தான் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக் கியக் காரணம் என கூறப்படு கிறது.

ஆனால், சர்வதேச அளவில் நிலவும்சில பிரச்சினைகளின் காரணமாகவே எரிபொருள்க ளின் விலை உயர்ந்திருப்பதாக வும், விலை உயர்வு தற்காலி கமான ஒன்றுதான் என்று கூறி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமாளிக்கிறார்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றுகூறிய மத்திய பாஜக அரசை கண்டித் தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித் தும் செப்டம்பர் 10 ஆம் தேதி யன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.