எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வாக்குமூலம்

மும்பை, அக்.10 ஆட்சிக்கு வருவோம் என எதிர் பார்க்கவில்லை; அதனால்தான் பெரிய பெரிய வாக்குறுதிகளை அளித்தோம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறி யுள்ளார்.

மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத் துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 4 மற்றும் 5- ஆம் தேதிகளில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கூறியதாவது:

கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்க வில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதி களைக் கொடுத் தோம். ஒருவேளை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்று இருக்க வேண்டியதில்லை. ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அத னால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக் கொண்டே கடந்து செல் கிறோம் என தெரிவித்தார். நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேக மாக பகிர்ந்து வருகின்றனர். காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த வீடியோவை தனது ட்விட் டர் பக்கத்தில் பகிர்ந்து நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே என குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner