எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத், அக். 11- குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர் கள் மீதான தாக்குதல் தொடர் பாக டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது. குஜராத்தின் சபர்காந்த் மாவட்டத்தை சேர்ந்த 14 மாத குழந்தை கடந்த மாதம் 28ஆம் தேதி பீகார் இளைஞரால் பாலியல் வன்முறை செய்யப் பட்டார்.

இந்த சம்பவத்தால் வடக்கு குஜராத்தில் இந்தி பேசும் மக்க ளுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அங்கு வாழும் உத்தர பிர தேசம், பீகார், மத்திய பிரதே சத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாக்கப்பட் டனர். இதையடுத்து, இந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தப்பி சென்றனர். இது தொடர்பாக காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ` வன்முறை சம்பவத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டதால் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கள் பலர் குஜராத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்ட தாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மாநில உள் துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா நேற்று முன்தினம் கூறுகையில்,` வன்முறை சம்ப வம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து காந்திநக ரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் அபிலாஷ குமாரி கூறியதாவது: குஜராத்தில் வசித்து வந்த இந்தி பேசும் மக்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதல் சம்பவம், இதையடுத்து அவர்கள் வெளி யேறிய நிகழ்வு குறித்து மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோ ருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை  20 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner