எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சண்டிகர், அக். 29- அரியானா மாநிலம் பிவானி மாவட்டத் தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் குத்துச் சண்டை போட்டியில் தனது திறமையை கொண்டு சர்வதேச அளவில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர், இதுவரை 17 தங்கங்களும், ஒரு சில்வர் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.

இவரது அளப்பரிய திறமை மற்றும் வெற்றிகளை பாராட்டும் வகையில், இவருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்று தனது தந்தை வாங்கிய கடனை அடைப்பதற்காக அய்ஸ்கிரீம் விற்று பிழைத்து வருகிறார்.

இதுகுறித்து வீரர் தினேஷ் குமார் கூறுகையில், தற்போ தைய மத்திய அரசோ அல்லது முந்தைய மத்திய அரசோ தமக்கு எந்தவித உதவியும் செய்ய வில்லை எனவும், தற்போது அரசின் உதவியை நாடி இருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியா வுக்கு பெருமை சேர்த்த வீரர் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக அய்ஸ்கிரீம் விற்று வருவது, இந்தியாவில் விளை யாட்டுத் துறையை மேம்படுத் துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக ஆர்வலர் கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner