எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, அக்.30 மாலே கான் குண்டுவெடிப்பு வழக் கில், ராணுவ துணை தளபதி பிரசாத் சீறிகாந்த் புரோகித் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் மசூதி ஒன்றின் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந் தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந் தனர். இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கை மும்பை யில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக புரோகித் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், தங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வ தற்குத் தடை விதிக்க விசா ரணை நீதிமன்றத்துக்கு உத்தர விடக் கோரியும், தங்கள் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், புரோகித் தரப்பு மும்பை உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய் திருந்தது.

இந்த மனுவின் மீது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ். சிண்டே, ஏ.எஸ்.கட்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பினை அளித்தது. அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

இந்த வழக்கின் விசார ணையை விரைந்து முடிக்கக் கோரி, உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே வலியுறுத்தி உள் ளன. எனவே, குற்றம் சாட்டப் பட்டுள்ளோர் மீது குற்றச்சாட் டுகள் பதிவு செய்யத் தடை விதிக்க முடியாது. மற்றொரு மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

மேலும், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பின் ஆலோசகர் சந்தேஷ் பாட்டீல், நவம்பர் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner