எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிபிஅய் அதிகாரிகள் டில்லி நீதிமன்றத்தில் புகார்

புதுடில்லி, நவ. 3- -சிபிஅய் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்சப் புகா ரில், விசாரணை நடத்த விடா மல் தற்போதைய சிபிஅய் இடைக்கால இயக்குநர் நாகேஸ் வர ராவ் தடுப்பதாக சிபிஅய் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள் ளனர். சிபிஅய் சிறப்பு இயக் குநரான ராகேஷ் அஸ்தானா, மொயின் குரேசி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரிடமி ருந்து, மூன்றரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பதற் றம் அடைந்த மத்திய அரசு அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது.

அவருக்குப் பதில் ஆர் எஸ்எஸ்-காரரான நாகேஸ்வர ராவை, சிபிஅய்-யின் இடைக் கால இயக்குநராக நியமித்தது. இது பெரும் சர்ச்சைகளை ஏற் படுத்தியது. தங்களுக்கு நெருக் கமான ராகேஷ் அஸ்தானாவை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பவிடவும், ரபேல் விவகா ரம் அலோக் வர்மா கைகளுக்குச் சென்றுவிடாமல் தாங்கள் தப்பிக்கவும் மோடி அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. அதனை மெய்ப்பிக்கும் வித மாக, அஸ்தானா மீதான லஞ்ச குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த சிபிஅய்யின் சிறப்பு புல னாய்வுக்குழுவினர் அனைவ ரையும் ஒரே நேரத்தில் இட மாற்றம் செய்து, நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தங்களின் இடமாற்றத்திற்கு எதிராக, சிபிஅய் கூடுதல் கண்காணிப் பாளர் சுரீந்தர் சிங் குர்ம் மற் றும் துணைக் கண்காணிப்பாளர் ஏகே. பாஸி ஆகியோர் தனித் தனியாக டில்லி உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குர்ம்-தான், அஸ்தானா மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தவர்.

அந்த முதல் தகவல் அறிக் கையின் படி அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியாக நிய மிக்கப்பட்டவர் ஏகே. பாஸி. இவர்கள் தங்களின் மனுவில், அஸ்தானா மீதான விசாரணை மழுங்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். அஸ்தானா திட்டமிட்டே டில்லி உயர் நீதி மன்றத்தை குழப்புகிறார்; இதற்கு சிபிஅய்-யின் (நாகேஸ் வர ராவ்) தலைமையிடமிருந்து மறைமுகமான ஆதரவையும், உதவியையும் அஸ்தானா பெறு கிறார் என்று குர்ம் தெரிவித்து உள்ளார்.

தன்னுடைய இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் சத்தீஷ் தாகரிடமிருந்து, தனக்கு அச்சு றுத்தல்களும் மிரட்டல்களும் வருவதாகவும், அஸ்தானா குற்ற மற்றவர் என்று உறுதிப்படுத்து மாறு தாகருக்கு மேலிடத்தி லிருந்து கட்டளையிடப்பட்டு இருக்கிறது என்றும் ஏகே. பாஸி குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner