எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாசிக், டிச.6 மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.நாசிக் மாவட்டம் நிபாட் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சாதே என்ற விவசாயிதான் தனது ஆத்திரத்தையும், நாட்டின் விவசாயிகள் நிலையையும் பிரதமருக்கு உணர்த்த இவ்வாறு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, அவ ருடன் உரையாடுவதற்காக மத்திய வேளாண்துறை அமைச்சகத்தால் சில முற் போக்கு விவசாயிகள் தேர்வு செய்யப் பட்டனர். அப்போது தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளில் சஞ்சய் சாதேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசிக் மாவட்டம், நாட்டின் வெங்காயத் தேவையை 50 சதவீதம் நிறைவு செய்கிறது. இங்கு வெங்காயம் விளைச்சல் அதிகமாகும். இந்நிலையில் விவசாயி சஞ்சய் சாதே தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை நாசிக்கில் உள்ள மொத்தவிலை சந்தைக்கு விற்பனைக்காக கடந்த வாரம் கொண்டு சென்றார். ஆனால், அங்கு வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு மேல் விலைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை. பின், பேரம்பேசி கிலோ ரூ.1.40 பைசாவுக்கு விற்பனை செய்தார். அதன் மூலம் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி தனது வேதனையையும் நாட்டில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு விலை கிடைக்காமல் நலிவடைவதையும் உணர்த் தினார். அதுமட்டு மல்லாமல் மணிஆர்டர் அனுப்பக் கூடுதலாக ரூ.54 செலவானது என்றும் தெரிவித்தார்.

இது குறித்து விவசாயி சஞ்சய் சாதே கூறுகையில், “ என்னுடைய நிலத்தில் 750 கிலோ வெங்காயம் விளைந்தது. அதை எடுத்து நிபாட் சந்தைக்குச் சென்றால், கிலோ ஒரு ரூபாய்க்கு மேல் யாரும் வாங்கத் தயாராக இல்லை. பேரம்பேசி கிலோ ரூ.1.40 பைசாவுக்கு விற்பனை செய்தேன். அதன் மூலம் எனக்கு ரூ.1,064 கிடைத்து. ஆயிரக் கணக்கில் முதலீடு செய்து விவசாயம் செய்த விவசாயிக்குக் கிடைத்த கூலி இதுதானா. என்னால் ஆத் திரம் தாங்க முடியவில்லை. வேதனையைப் பொறுக்க முடிய வில்லை, நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலையை பிரதமர் மோடிக்கு உணர்த்தும் வகையில் வெங் காயம் விற்ற 1,064 ரூபாயையும் தபால் நிலையம் மூலம் மணிஆர்டராக இந்தியப் பிரதமர் மோடி என்ற முகவரியில் பிரதமர் நிவாரண நிதிக்குக் கடந்த மாதம் 29-ஆம் தேதி அனுப் பினேன். இதை அனுப்பு வதற்கு கமிஷனாக ரூ.54 கூடுதலாகக் கொடுத்தேன்” எனத் தெரிவித்தார்.

சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு

விடைக் குறிப்புகள் வெளியீடு

சென்னை, டிச.6  அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும் 10ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மய்யத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் அனுப்பவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாசிக், டிச.6 மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner