எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், ஜன.8 கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ஆம் தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங் கேறி வருகின்றன. இதில் அரசியல் தலைவர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.  சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,  மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க  ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மற்றும் பிற அமைப்புகள் முயற்சி செய்கின்றன. மாநிலத் தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 91.71 சதவீதம் பேர் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் தான்.  இதில், மக்கள் பிரதிநிதிகள், ஊடகத்தினர், வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் அடங்குவர். மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டத் தின் போது பொது சொத் துகளைப் பாதுகாக்கவும், தனிநபர்களின் சொத்துக் களைப் பாதுகாக்கவும்,  முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் அவசரச் சட்டம் கொண்டுவர  அரசு முடிவெடுத் துள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு பிரதமர் இப்படியா பொய் பேசுவது?

மோடிக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கண்டனம்

சண்டிகர், ஜன. 8 -பிரதமர் மோடி வாயைத் திறந்தாலே பொய்கள்தான் வருகின்றன என்று, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் விமர்சித்துள்ளார். ஒரு பிரதமர் இப்படியா பொய்பேசுவது? என்றும் அவர் கேட்டுள்ளார்.

“ஒவ்வொரு பிரச்சினையிலும் பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்து விடுகிறார். 1984 வன்முறையை, ‘ஒரு குடும்பத்திற்காக நடந்தது’ என்று மோடி கூறுகிறார். ஆனால், சீக்கியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாக, பாஜக மற்றும்ஆர்எஸ்எஸ் மீது திலக் மார்க் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பற்றி பதில் சொல்ல மறுக் கிறார். குருநானக்கின் 550-ஆவது கொண்டாட்டத்துக்கு பிரதமர் மோடி ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால், என்னவோ, சீக்கியர்களுக்கும், சீக்கிய மதத்திற் கும் பாதுகாவலரே தான்தான் என்று தோற்றம் காட்டு கிறார். மோடி ஒரு மாஸ்டர்தான். ஏனென்றால், வஞ்சகத்திலும் தவறான தகவல் தருவதிலும் அவரை மிஞ்சஆளில்லை.இவ்வாறு அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner