எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்

லக்னோ, ஜன.9 2019 மக்களவைத் தேர்தலில், மோடி அலையும் அடிக்காது; அவரின் மாயாஜால மும்' பலிக்காது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சங்பிரியா கவுதம் கூறியுள்ளார்.தற்போது 88 வயதாகும் சங் பிரியா கவுதம், வாஜ்பாய் அர சில் அமைச்சராக இருந்தவர் ஆவார். இந்நிலையில், அவர் அறிக் கையொன்றை வெளியிட்டுள் ளார்.  அதில் சங்பிரியா கவுதம் கூறியிருப்பதாவது:

மோடி பெரிய தலைவர்தான். நான் மறுக்கவில்லை. ஆனால், வருகின்ற மக்களவைத் தேர்த லில் அவரது அலை எதுவும் இருக்கப் போவது இல்லை. மோடியின் மாயாஜாலமும்' இந்த முறை பலிக்காது. பாஜக ஆட்சிக்கு வருவதே சந்தேகம்தான். இது பாஜக தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால், அதனை வெளியே கூறாமல் அமைதியாக இருக் கிறார்கள். மோடி அரசின் அனைத்துக் கொள்கைகளும், மக்களை கோபம்அடையச் செய்வதாகவே இருக்கின்றன.

திட்டக் குழுவை கலைத்து பெயரை மாற்றியது. சிபிஅய் மற்றும் ரிசர்வ் வங்கியின் செயல் பாடுகளில்தலையிடுவது,தேர்ந் தெடுக்கப்பட்ட உத்தர்கண்ட் அரசுக்கு இடையூறு செய்தது ஆகியவற்றால்பாஜகவுக்குகெட் டப் பெயர் கிடைத்துள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங் களில் பாஜக ஆட்சியமைத்த விதமும் சரியானதல்ல. இப் போது மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தல் வந்தால், பாஜகவுக்கு தோல்விதான் கிடைக்கும் என்றார்கள்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner