எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், மார்ச் 3 -மத்தியப்பிரதேச மாநிலம், அவுரங் பூரா கிராமத்தில் ராமர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு தாழ்த் தப்பட்ட மக்கள் வழிபடு வதற்கு, அங்குள்ள ஜாதி ஆதிக்க வெறியர்கள் தடை ஏற் படுத்தியிருந்தனர்.

இந்நிலையில்தான், தாழ்த் தப்பட்ட மணமகன் அஜய் மால்வியா (22), தனது திரு மணம் முடிந்த கையோடு, காவல்துறைப் பாதுகாப்புடன் அவுரங்பூராராமர் கோயிலுக் குள் நுழைந்து வழிபாடு நடத் தியுள்ளார். இதன்மூலம் காலம் காலமாக ஏற்படுத்தி வைக்கப் பட்டிருந்த தடையையும் உடைத்துள்ளார். இது தாழ்த்தப் பட்ட மக்கள் மத்தியில் மகிழ்ச் சியையும், எழுச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அஜய் மால் வியாவின் மூத்த சகோதரர் தர்மேந்திர மால்வியா (32), செய்தியாளர்களுக்கு அளித் துள்ள பேட்டியில், “எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் கோயிலுக்குச் சென்றதை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை; ஆனால், தற்போது என் தம்பி கோயிலுக்குச் சென் றுள்ளார்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அத்துடன், 2009-இல் தன்னுடைய திருமணம் நடைபெற்றபோது, குதிரையில் ஊர்வலம் சென்றதற்காக, ஜாதி ஆதிக்க வெறியர்கள் கற்களை வீசித் தாக்கிய தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner