எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், மார்ச் 13- மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவு (ஒபிசி) மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக் கும் வகையில், அந்த மாநில காங்கிரஸ் அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தற்போது ஓபிசி பிரிவு மக்க ளுக்கு 14 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது 27 சதவிகிதமாக அதி கரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போபாலில் அந்த மாநில சட்டத்துறை அமைச்சர் பி.சி. சர்மா செய்தியாளர் களிடம் கூறுகையில், "அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு விட்டது' என்றார்.

மத்திய பிரதேச அரசு அதி காரிகள் கூறுகையில், "மக்கள வைத் தேர்தல் தேதி விரைவில் வெளியிடப்படவுள்ளது. அப்படி வெளியிடப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இதை கருத்தில் கொண்டு, தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் னரே, இடஒதுக்கீடு அவ சர சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம், நாட்டி லேயே ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங் கிய ஒரே மாநிலம் என்ற பெருமையை மத்தியப் பிர தேசம் பெறுகிறது' என்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் முதல்வராக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங் சவுஹான் ஆவார். 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிசி மக்களின் 50 சதவீத வாக்குகள், பாஜகவுக்கு கிடைத்தன. இதன்மூலம், அந்தத் தேர்தலில் பாஜக 109 தொகுதிகளில் வென்றது. எனி னும், காங்கிரஸ் 114 தொகுதி களில் வென்று ஆட்சியமைத் தது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகு திகளில் 26அய், கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கைப்பற்றியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner