எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாடாளுமன்ற தேர்தல் மார்ச் மாதம் இரண்டாம் வாரம் அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்துவங்கிவிட்டது. நாடு முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது, நேர்மையாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் அலுவலகங்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் வீட்டில் முடக்கி வைப்பது, உறவினர்களின் வீடுகளுக்குச்சென்று மிரட்டுவது, வருமானவரி என்ற பெயரில் தேர்தல் ஆணையமே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவது, மோடிக்கு எதிராக செயல்படும் அனைவரையும் மிரட்டுவது, ஆளும் கட்சிக்கு எதிராக நூல் வெளியிட்டால் கூட அதை தேர்தல் அதிகாரிகள் பறித்துச்செல்லும் நிலை உருவாகியுள்ளது, மற்றொரு புறம் மோடி தொடர்ந்து மதம் குறித்து பேசுகிறார், ராணுவ வீரர்களின் உயிரிழப்பை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்று இட்டுக்கட்டி பேசுகிறார், சாமியார் ஆதித்யநாத் இசுலாமிய கட்சியை கொடிய நோய் பரப்பும் வைரஸ் என்று கூறுகிறார், ஆனால் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் சட்டவிரோத நடவடிக்கை, பேச்சுக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது, என்பதைசொல்லும் கருத்துச்சித்திரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner