எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பயணித்த அதே இடத்தில் சிங்கப்பூரில் தந்தை பெரியார் நினைவு நாள்

சிங்கப்பூரின் வரலாற்றுப்புகழ் பெற்ற இடங்களில் ஒன்றாக உள்ள தஞ்சோங் பகார் பழைய ரயில்நிலையத்தில் 25.12.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று  பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை நடைபெற்ற கவிமாலையின் 202ஆவது கூட்டத்தில் கவி மாலையுடன் இணைந்து சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் பெரியாரின் சிங்கை வரலாற்று பயண நினை வலைகளை;ரீ  பகிர்ந்து கொண்டது.

பெரியாரின் 43ஆம்நினைவுநாளுக்கு (24 டிசம்பர் 2016 ) அடுத்த நாள் 25 டிசம்பர் 2016 நடைபெற்ற இக்கூட்டம். பெரியார் சிங்கப்பூருக்கு வந்திறங்கிய அதே இடத்தில் அவருக்கு நன்றி கூறிய நிகழ்வாக இருந்தது.

அதாவது 62 ஆண்டுகளுக்கு முன்பு 31 டிசம்பர் 1954 அன்று 4000 பேர் வாழ்த்தொலிகளுடன் சிங்கப்பூரில் பெரியாரை வரவேற்ற அதே ரயில் நிலையத்தில் அவரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையேயான ரயில் பாதை தஞ்சோங் பகார் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப் படும் இந்த ரயில் பாதை அய்ந்தாண்டுகளுக்கு முன்னர் 2011ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பிறகு இடிக்கப்படாமல் இருந்த தஞ்சோங் பகார் ரயில் நிலையம் இப்போது மறுசீரமைக்கப்பட உள்ளது. அதனால் கடைசியாக பொது மக்களின் பார்வைக்காக 25 டிசம்பர் 2016 அன்று ஒரு நாள் திறந்து விடப்பட்டது.

இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி கவிமாலை கவிஞர் களின் கவிதைகளை வரலாற்று சிறப்புமிக்க வழித்தடத்தில் வாசிக்க வைக்கவும்,  பெரியார் அவர்கள் சிங்கப்பூர் வந்து சென்ற வரலாற்று செய்தியை நினைவுகூரிடவும், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தையும் இணைத்துக் கொண்டு நிகழ்ச்சியை கவிமாலை சிறப்பாக நடத்தியது.

நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய கவிமாலையின் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான ரயில் நிலையம் இந்த தஞ்சோங் பகார் ரயில் நிலையம் இந்த ரயில்தடம் வழியாகதான் தந்தை பெரியார் சிங்கப்பூருக்கு இருமுறை வருகை புரிந்தார். அப்போது சிங்கப்பூர் தமிழர்கள் ஒன்று கூடி பெரியாருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார்கள்.

பெரியாருக்காகவே புதிய கார்

பெரியாருக்காகவே புதிதாக கார் வாங்கி அதனை அலங்கரித்து அதில் பெரியாரை அமரவைத்து சுமார் 100க்கும் மேற்பட்ட மோட்டார் வாகனத்தில் முன்னும் பின்னும் ஊர்வலமாக சென்றார்கள். அப்போது பெரியாருக்கு போடப் பட்ட மாலைகளே சுமார் 300க்கும் மேல் என்று வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பைக் காட்சிப் படுத்திச் சொன்னார். மேலும் இந்த வரவேற்பு காட்சியை சென்ற ஆண்டு பெரியாரை பற்றி அவர் எழுதிய கவிதையில் இடம்பெற்ற ஒரு பத்தி :

தொடர்வண்டி வழிவந்து சிங்கையில்
தொண்டரசர் இறங்கியதும்
தோளில் மாலைகள் முன்னூறு..அதைத்
காணவேண்டும் கண்ணூறு..!
ஆற்றவின் அறிஞருக்கு
நூறுவண்டி வரவேற்பு-சிங்கைச்
சாலைமேல் தொடர்வண்டி
சாற்றிடும் இவர் படர்தொண்டை...!

-    என்று கவிதை நடையில் வாசித்தார்.

லண்டனில் இசை பயின்று, இசை அமைப்பாளர்  ஏ.ஆர். ரகுமான் அவர்களிடம் பயிற்சி பெற்ற சிங்கப்பூர் இசைத் தொழில் நுட்பக்கலைஞரும், பாடகருமான குணசேகரன் உரையாற்றும் போது நானும் முதன் முதலில் சிங்கப்பூருக்கு வந்திறங்கும் போது இந்த தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் தான் வந்திறங்கினேன்.

மேலும் என்னுடைய அப்பா தந்தை பெரியார் மற்றும் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தொண்டர். அவர்களின் கொள்கையை ஏற்று வாழ்ந்து சிங்கப் பூரில் அந்த காலத்தில் தமிழுக்காக உழைத்துள்ளார் என்று கூறி கவிஞர் இறை.மதியழகன் எழுதி வாசித்த பெரியார் கவிதையின் மற்றொரு பத்தியின் சில வரிகளை ராகத்துடன் பாடலாக சிறப்பாகப் பாடினார்.

“பள்ளத்தைக் குன்று செய்வார் பெரியாரென்பது
வள்ளுவன் வகுத்தவழி- நின்றே
வாழ்ந்தவர் பெரியாரடா....
கடவுளே இல்லை என்றார் - மக்கள்
இழிவாழ்வு கண்டிரங்காக் கடவுளே
கடவுளும் கடவுளே இல்லையென்றார்
உண்மையில் கடவுள் யார் என்பார்?
பெரியார் உண்மையில் கடவுளடா..!”

-என்று பாடி அந்த முழு கவிதையையும் இசையமைத்து பாடலாக பாடவுள்ளதாகவும் அறிவித்தார்.  பெரியார் சிங்கப்பூ ரில் வந்து இறங்கும் போது “பெரியார் வாழ்க” என்று தமிழர் களின்  வாழ்த்தொலிகளுடன் வரவேற்ற அதே ரயில் நிலை யத்தில் அவரை வாழ்த்தி கவிதையாகவும், பாடலாகவும் குண சேகரன் பாடியாது வரலாற்றுச் சான்றாக அமைந்தது.

மேலும் அவரின் இசைப்பயிற்சி வகுப்புகள் பற்றியும், தான் மேற் கொள்ளும் தமிழ் இசைப்பயிற்சிகளிலும், திட்டங்களிலும், சிங்கப்பூர் கவிஞர்கள் பங்கு பெற்றுப் பயனடையலாம் னீusவீநீ.sரீ என்ற இணையத்தளத்தில் கவிஞர்கள் தனது இசை வடிவ ஆக்கங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று கூறினார்.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் க.பூபாலன் உரையாற்றும் போது பெரியார் அவர்களின் மலாயா சுற்றுப்பயணத்தின் சிறப்பைப் பற்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி கவிஞர் இறை.மதியழகன் முதலில் எங்களிடத்தில் இந்த யோசனையைத் தெரிவித்தார். அப்போது இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. அதுவும் பெரியாரின் 43ஆவது நினைவு நாளுக்கு அடுத்த நாள் நடை பெறவுள்ளது. அதனால் நன்றாக செய்யலாம் என்றும், நாங்களும் அதில் கலந்துக்கொள்கிறோம் என்றும் கூறியதாக சொன்னார்.

அதே இடத்தில்

எந்த இடத்தில் பெரியார் அவர்கள் சிங்கப்பூரில் வந்து இறங்கினாரோ அதே இடத்தில் நாம் இன்று அவரது படத் தினை வைத்து நினைவுக்கூர்கிறேம். அதுமட்டுமல்ல இதே  டிசம்பர் 25ஆம் தேதிதான் பெரியார் அவர்கள் 1929இல் சிங்கப்பூருக்கு முதன் முறையாக வந்தார். 87 ஆண்டுகள் முழுமையாக முடிவுற்ற நிலையில்  இன்று நாம் அதே டிசம்பர் 25, 2016இல்  அவர் வந்திறங்கிய இடத்தில் அவரின் நினைவைப் போற்றுகிறோம். மேலும் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையத்தில் கவிமாலை கவிஞர்கள் கவிதை வாசிப்பது பெரியார் அவர்களின் சிங்கை வருகையின் பலன்களில் சான்றான ஒன்றாகும் என்றார்.

பெரியார் அவர்கள் முதன் முறையாக 1929இல் சிங்கப் பூருக்கு வருகை புரிந்தபோது தமிழர்கள் சிறப்பான வர வேற்பு அளித்தார்கள். அந்த வரவேற்பு நிகழ்ச்சியைத்தான் இங்கு இறை. மதியழகன் தன்னுடைய உரையிலும் கவிதை யிலும் குறிப்பிட்டார்.  அந்த வரவேற்பு பற்றி படத்துடன் 1929இல் சிங்கப்பூரில்வெளிவந்த“The Malayan Saturday Post”
என்ற ஆங்கில செய்தித்தாள் வெளியிட்டு உள்ளது என்று அந்தப் படத்தினைக் காண்பித்தார்.

1954இல் இரண்டாவது முறையாக பெரியார் அவர்கள் சிங்கப்பூர் வந்து இறங்கியபோது இந்த ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி பெரியாரை சிறப்பாக வரவேற்றார்கள். அந்த காட்சியை 1954-55-ல் வெளி வந்த தமிழ்முரசு செய்திதாளில் “நாலாயிரவர் வாழ்த்தொலி களுக்கிடையே பெரியார் சிங்கப்பூர் சேர்ந்தார்” என்று தலைப் பிட்டு படத்துடன் வெளியிட்டுள்ளது என்று கூறி அந்தப் படத்தையும் காண்பித்தார்.

பெரியார் அவர்கள் வருகைக்குப் பின்புதான் மலாய சிங்கப்பூர் தமிழர்களிடையே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதனால் தான் இந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு இன்று உரிமையுடன் இங்கு வாழக்கூடிய நிலையை அடைந்துள்ளார்கள். இதனை நான் கூறவில்லை, சிங்கப்பூர் தமிழ்முரசின் செய்தி ஆசிரியராக இருந்த வை.திருநாவுக்கரசு அவர்கள் “பெரியார் வருகை தந்த பலன்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

“இந்த நாட்டுக் குடிமக்களாக மாறுங்கள். இந்த நாட்டு குடியுரிமைப் பெற்று இந்த நாட்டுக்காக உழையுங்கள் அப்போது தான் நீங்கள் மற்ற சீன, மலாய் சமூகத்தினருக்கு சமமாக இந்த நாட்டில் உரிமைபெற முடியும்'' என்று பெரியார் அறிவுரை கூறினார். இப்படி பெரியார் கூறியது சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கு நல்ல வழியாகத் தெரிந்தது. அதனால் அதுவரையும் மதில் போல் பூனையாக இருந்தவர்களும், பெரியாரின் அறிவுரையினால் குடியுரிமைக்கு விண்ணப்பித் தார்கள் என்று வை.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார்.

1929இல் பெரியாரின் வருகைக்குப் பின்புதான் 1930 களில் சிங்கப்பூரில் தமிழர் சீர்த்திருத்த சங்கம் தோன்றியது. அதன் தலைவராக அ.சி.சுப்பையா அவர்களும், செயலாளராக தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களும் இருந்தார்கள். அந்த சங்கத்தின் முக்கிய நோக்கமே சாதி, தீண்டாமையை ஒழிப்பது. குடிப்பழக்கத்தை ஒழிப்பது, கல்வியை வளர்ப்பது, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை கொடுப்பது. அந்த சங்கத் தின் வழியாகத் தான்   தமிழகளிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார்கள் என்றார்.

பெரியார் அவர்களின் சிங்கப்பூர் பயணத்தின் வரலாற்று தகவல்களை ஆசிரியர் வீரமணி அவர்கள் முழுமையாக தொகுத்து “மலேசியா சிங்கப்பூரில் பெரியார்” என்று நூலில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வரலாற்று செய்திகளும் சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தில் ஆவணமாக உள்ளது, சிங்கப்பூர் இந்திய மரபுடைமை நிலையத்திலும் பதியவைத்து உள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு ஷிநி50இல் நடைபெற்ற “முரசு‘‘ நாடகத்திலும் காட்சியாக காண்பித் தார்கள். இப்படி கூறுவதற்கு நல்ல சான்றாக  சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் மறைந்த எஸ்.ஆர்.நாதன் அவர்கள் சென்ற ஆண்டு பெரியார் பணி இதழுக்கு கொடுத்த  வாழ்த்து செய்தியில் தெளிவாக குறிப்பிடுகிறார்:

“1930களின் பிற்பகுதியில் பெரியாரை நான் மூவாரில் பார்த்திருக்கிறேன்; அவருடையப் பேச்சுக்களையும் கேட்டி ருக்கிறேன். அவர் அங்கே ஆதிதிராவிட முன்னேற்ற சங்கம் என்ற ஓர் அமைப்பை நிறுவினார். வறுமையில் வாழும் இந்தியர்களுக்கு உதவி செய்யுமாறும் வலியுறுத்தினார். மலேயா, சிங்கப்பூரில் உள்ள ரப்பர் தோட்டத் தொழிலாளர் களாகவும் துப்புரவுத் தொழிலாளர்களாகவும் வேலை செய்து தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களின் முன்னேற் றத்திற்குரிய வழிகளைக் கண்டறியுமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

கவிமாலை கவிஞர்களுக்கு நா.மாறன், இராஜராஜன், தமிழ்ச்செல்வி ஆகியோர் பரிசு வழங்கினர்.

இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாக இருந்த மக்கள் படும் வேதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் பற்றிப் பெரியார் பேசும் தமிழ்ப் பேச்சுக்கள் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தின.. அவருடைய முன்னேற்றச் சிந்தனைகள் பற்றிய பேச்சு சிங்கப்பூர் மக்களுக்கு இன்றும் தேவைப்படுகின்ற ஒன்று.

மலேயா, சிங்கப்பூர் நாடுகள் படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளன. மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்துள்ளது. அதனால் இந்தியாவிலிருந்த அத்தகைய கொடிய பழக்கங் களினால் விளையும் கேடுகள் இங்கு வேரூன்ற இயலவில்லை.  இங்கு வாழும் இந்தியர்களுக்கு அவருடையப் பேச்சு நல்வழி காட்டியாக அமைந்தது.”

என்ற மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களின் செய்தியை படித்துக் காட்டி உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன் அவர்கள் கவிமாலையின் சார்பாக பெரியார் சமூக சேவை மன்றத்தின் செயலாளர் க.பூபாலன் அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்

நிகழ்ச்சியில் தொடர்ந்து “பொங்கலோ பொங்கல்” தலைப் பில் இயற்றப்பட்ட கவிதைகளை கவிஞர்கள் வாசித்தார்கள்.

சிறப்பாகக் கவிதை வாசித்த  கவிஞர்களுக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் நா.மாறன், இராஜ ராஜன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வி, செயலாளர் க.பூபாலன், வழக்குரைஞர் ராஜேந்திரன் ஆகியோர் கவிமாலையின் சார்பாக பரிசுகளை வழங்கினார்கள்.

ரயில் நிலையத்தைப் பார்க்க வந்த பார்வையாளர்கள்  சீனர்கள், மலாய்காரர்கள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டி ருந்த பெரியாரின் படங்களைப் பார்த்து அதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அய்யாவின் பொன்மொழிகளை படித்துப் பார்த்து அத்துடன் நிழற்படம் எடுத்துக்கொண்டது ஆச்சரிய மான ஒன்றாக இருந்தது.

அங்கு வந்திருந்த ஒரு தமிழ் தம்பதிகள் பெரியாரின் படத்துடன் நிழற்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள்  யார் என்று விசாரிக்கும் போது அவர் பெயர் “இந்திரஜித்” சிங்கப்பூரில் வாழ்கிறார், பூர்வீகம் தமிழ்நாடு புதுக்கோட்டை. அவரின் அப்பா பெயர் பி.வி.வடிவேலு (றீணீtமீ) திராவிடர் கழக புதுக்கோட்டை மாவட்ட தலைவராக இருந்துள்ளார். எங்கள் வீட்டிற்கு பெரியார் அவர்கள் 1962இல் வந்துள்ளார்கள். எனக்கு “இந்திரஜித்” என்று பெயர் வைத்ததே பெரியார் தான் என்று கூறி மகிழ்ந்தார். பெரியார் வந்திறங்கிய ரயில் நிலை யத்தில் பெரியாரல் பெயர் வைக்கப்பட்டவரும்,  அந்த ரயில் நிலையத்தில் பெரியார் படத்துடன் குடும்பத்தினர் களுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டது ருசிகரமான செய்தி.

நிகழ்ச்சியில் கவிமாலையின் பொறுப்பாளர்கள், கவிஞர் கள்,  பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் நா.மாறன், இராஜராஜன்,இளையமதி, கவிதாமாறன், தமிழ்ச்செல்வி, பர்வீன்பானு, வானதி, வளவன், இனியநிலா, “பெரியார் பிஞ்சு” ஆதவன், ஜகன் தங்கதுரை, பகுத்தறிவு, சேது ஜகதீசன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக நன்றி கூறிய கவிமாலையின் தலைவர் இறை.மதியழகன்இந்த நல்ல  வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல யோச னையை வழங்கிய கவிமாலை காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். பெரியாரின் பெருமை கூறும் இந்த நிகழ்வில் பங்குகொண்ட பெரியார் சமூக சேவை மன்றத்தையும் பாரட்டினார்.

செய்தி: க.பூபாலன், சிங்கப்பூர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner