எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜன.1 போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, சிரியா அரசுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்தது.

ரஷ்யா மற்றும் துருக்கியின் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கை வெற்றி கரமாக நடைமுறைக்கு வந்ததாகத் தெரிகிறது என்று அசோசியேட் டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அமைதி உடன்படிக்கையை அய்.நா. வரவேற்றது. சிரியாவுக் கான அய்.நா. சிறப்புத் தூதர் ஸ்டெஃபான் டிமிஸ்டூரா போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், மனித நேய காரணங்களுக்காக அனைத்துத் தரப்பினரும் முற்றி லுமாக அமைதி உடன் படிக்கை யைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போது ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கையை “மா பெரும் சாதனை’ என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜரீஃப் குறிப் பிட்டார்.

இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக வரைவுத் தீர்மானம் ஒன்றை ரஷ்யா அய்.நா. பாதுகாப்புக் குழுவில் முன் வைத்தது. அய்.நா.வுக்கான ரஷ்ய தூதர் விடாலி சுர்கின் அந்த வரைவுத் தீர்மானத்தை பாது காப்புக் குழு உறுப்பு நாடுகளின் தூதர்களின் பரிசீலனைக்காக அளித்துள்ளார். விவாதத்துக்குப் பிறகு, அடுத்த ஓரிரு நாட்களில் அதன் மீது பாது காப்புக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
எதிரெதிர் அணியில் இருந்த ரஷ்யா - துருக்கி முயற்சியில் ஏற்பட்ட அமைதி உடன்படிக் கைக்கு அய்.நா. பாதுகாப்புக் குழுவின் அங்கீகாரம் கிடைப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தமானது சிரியா பாது காப்புப் படையினருக்கும் கிளர்ச் சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டைக்கு மட்டுமே பொருந்தும். சிரியாவில் உள்ள இஸ்லாமிய தேச பயங் கரவாதிகள், அல்-காய்தாவின் கிளைக் குழுக்கள் ஆகியவற்றுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள் ளது.

சிரியாவில் ஏழு முக்கியக் கிளர்ச்சிக் குழுக்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாக ரஷ்யா தெரிவித்திருந்தது. அவற்றில் ஒன்று கூட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்யும் அறிக்கையை வெளியிட வில்லை. மேலும், ஒரு குழு உடன்படிக்கையில் கையெழுத் திட்டதாகக் கூறப்படுவதை மறுத் தது.

அமைதி நீடிக்கும் பட்சத்தில், அடுத்த கட்டமாக, பிரதான கிளர்ச்சித் தலைவர்களுக்கும் அரசுத் தரப்புக்கும் இடையே கஜகஸ்தானில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெறும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner