எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், ஜன. 2- இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோட் டைச் சேர்ந்தர் ஷேக் ரபிக் முக மது. ஆரம்பக் கல்வி மட்டுமே முடித்த இவர் இளம் வயதி லேயே மும்பை சென்று வேலை செய்து பல்வேறு தொழில் நுணுக்கங்களை கற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உள்ளார். சவுதி, ஈரான், அய்க் கிய அரபு அமீரகம், கிர்கிஸ் தான் ஆகிய நாடுகளில் தொழில் செய்தார். அவரது குடும்பம் துபாயில் வசிக்கிறது.

இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ மேஜர் ஜெனர லாக ஷேயிக் ரபீக் முகமது நிய மிக்கப்பட்டுள்ளார். அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் அலி மிர்சா நியமித்திருப்பதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு கிர்கிஸ்தான் நாட்டில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு அவரை ராணுவ மேஜர் ஜெனரல் பொறுப்பை ஏற்கும்படி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து கலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் நாட்டிற்காக மிகப்பெரிய எஃகு ஆலையை ரபீக் அமைத் துக் கொண்டிருந்தபோது கிர் கிஸ்தான் முன்னாள் அதிபர் குர்மன்பெக்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் அவர் மூலம் கிர்கிஸ் தான் நாட்டிற்கும் அதேபோன்ற ஆலையை அமைத்துக்கொடுத் தார். அத்துடன் கிர்கிஸ்தான் குடியுரிமை பெற்றார். அதிபர் தேர்தலில் குர்மன்பெக் வெற்றி பெற்றதும் ரபீக்கை தனது தலைமை ஆலோசகராக நிய மித்தார்.

அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல்லாகும். 5ஆ-ம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே கேரளாவில் இருந்து குடிபெயர்ந்த ரபீக், சமீபத்தில் கிர்கிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதன் மூலம் உயர் பதவியை அடைந் துள்ளார் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் ராணுவ பதவிக்கு வருவது மிகவும் அரிது என ரபீக்கின் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner