எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜன.3 உலக அமைதிக்கு முன்னுரிமை அளித்து அய்.நா. சபை செயல் படும் என்று அதன் புதிய பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

அய்.நா. பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பான் கி-மூனின் பதவிக் காலம் கடந்த 31-ஆம் தேதி நிறைடவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச் செயலாளராக போர்ச்சுகல் முன் னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் கடந்த 1ஆ-ம் தேதி பதவியேற்றார்.
புத்தாண்டையொட்டி அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறி யிருப்பதாவது:

உலக அமைதி மட்டுமே நமது லட்சியமாக இருக்க வேண் டும். அதன்படி 2017ஆ-ம் ஆண்டு அமைதிக் கான ஆண்டாக அமையட்டும். இந்த ஆண்டில் அமைதி முயற்சி களுக்கு அய்.நா. முன்னுரிமை அளித்து செயல் படும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத் துழைப்பு நல்க வேண்டும். இதையே புத்தாண்டு உறுதிமொழி யாக ஏற்போம்.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெறு கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

நாம் அனைவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே சண்டைக்கு இடமளிக்காமல் அமைதியை கட்டிக் காப்பாற்ற வேண்டும். நீதி, நேர்மை, சகிப் புத் தன்மை, ஒற்றுமைக்கு முத லிடம் அளிக்க வேண்டும். உலகில் அமைதி நிலவினால்தான் உலக நாடுகள் வளர்ச்சி அடைய முடியும்.

அய்.நா. சபையின் சார்பில் 180 நாடுகளில் 85 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அலுவலர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவ்வளவு ஊழி யர்கள் இருந்தும் சில இலக் குகளை எட்ட முடிய வில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காத்திருக்கும் சவால்கள்

சிரியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடை பெறுகிறது. இதேபோல இராக், ஆப்கானிஸ்தான், ஏமன், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளிலும் உள்நாட்டு குழப்பம் நீடிக்கிறது.

அய்.நா. மனித உரிமை ஆணைய புள்ளிவிவரத்தின்படி உலகம் முழு வதும் சுமார் 2.13 கோடி பேர் அகதி களாக பரித வித்து வருகின்றனர். இதில் சிரியாவைச் சேர்ந்தவர்கள் மட் டும் 49 லட்சம் பேர் உள்ளனர்.

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாரிஸ் ஒப்பந்தத்தை ரத்து செய் யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பிரச்சினைகள் புதிய பொதுச்செயலாளர் அந்தோனி யோ குத்தேரஸுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன.  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner