எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமேசான், ஜன.3 பிரேசில் சிறைக்குள் கைதிகளுக்கு இடை யே நடந்த கடும் மோதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இத்தகைய வன்முறைச் சம்ப வங்களைத் தடுத்து நிறுத்த பிரேசில் சிறைத் துறை தவறிவிட்டதாக மனித உரிமை ஆர் வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே, அளவுக்கு அதிக மான கைதிகள் அந்நாட்டுச் சிறைகளில் அடிப்படை வசதி களின்றி அடைக்கப்பட்டிருப் பதாக விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது நேர்ந் துள்ள இந்தச் சம்பவம் புதிய விவாதப் பொருளாக உரு வெடுத்துள்ளது.

பிரேசிலின் அமேசான் மாநி லத்தில் அமைந்துள்ளது மானஸ் சிறைச்சாலை. இங்கு பல்லாயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதி களுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுந்த வாக்கு வாதம் சண்டையாக மாறியது. பிறகு அது கடும் மோதலாக மாறி சிறை வளாகமே கலவர பூமி யானது. பல மணி நேர போராட் டத்துக்குப் பிறகு சிறைக் காவ லர்கள் நிலைமையைக் கட்டுக் குள் கொண்டு வந்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்து விட்டதாக சிறைத் துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள தால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

குறைந்த இடவசதி கொண்ட பிரேஸில் சிறைச் சாலைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கைதி கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பினத்தைச் சேர்ந்தவர்களா வர்.

அந்நாட்டு சிறைகளுக் குள் அடிக்கடி மோதல் வெடிப் பதும், அதனால் கைதிகள் இறப் பதும் தொடர்கதையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner