வாஷிங்டன், ஜன.4 அமெரிக்கா மீது வடகொரியாவால் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியாது என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் யங் தொலைக்காட்சியில் புத் தாண்டு உரை நிகழ்த்தினார். சுமார் 30 நிமிடங்கள் ஆற்றிய உரையில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை தயாரித்து வருகிறது.
அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள் ளது. எனவே அந்த ஏவுகணை சோதனை விரைவில் நடத்தப் படும் என்றார்.
அவரது இப்பேச்சு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற் படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக் கப்பட் டுள்ள டொனால்டு டிரம்ப் டுவிட் டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அமெரிக்காவை தாக் கும் அளவுக்கு வடகொரியாவால் ஏவுகணை தயாரிக்க முடியாது.
எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் வட கொரியா அரசு எண்ணம் பலிக் காது என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியாவை அணு ஆயுத நாடு என ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா கூறி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா பற்றி டிரம்ப் இதுவரை தனது கொள் கையை அறிவிக்காத நிலையில் தற்போது தனது நிலை பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்