எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தோனேசியா, ஜன.5 ஆஸ் திரேலியாவுடனான ராணுவ உறவை தாற்காலிகமாகத் துண் டித்திருப்பதாக இந்தோ னேசியா புதன்கிழமை அறிவித்தது.

இதையடுத்து, அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா  - இந்தோனேசியா இடையிலான உறவில் மேலும் சிக்கல் ஏற் படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்தோனேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் வுர்யான்டோ கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை தாற் காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு தொடர்பாக ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு கடந்த மாதமே கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிரச்னைகள் விரைவில் தீரும் என்று நம்பு கிறோம் என்றார் அவர்.

இந்தோனேசிய ராணுவத்தி னருக்கு ஆஸ்திரேலியா பயிற்சி யளிப்பதற்கான சாதனங்கள், இந்தோனேசியாவை அவமதிக் கும் வைகையில் அமைந்துள்ள தால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக “கம்பாஸ்’ என்ற இந் தோனேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் வுர்யான்டோ மறுத்தார்.

அண்டை நாடுகளான ஆஸ்திரேலியாவும், இந்தோ னேசியாவும் நட்புறவைக் கொண்டிருந்தாலும், அவ்வப் போது அந்த உறவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner