எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜன.5 இறுதிக் கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளின் விவ ரங்களை அளிக்குமாறு இலங்கை ராணுவத்துக்கு அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும், விடுதலைப் புலி களுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் பல்வேறு குற்றங்கள் அரங்கேறின. 40,000 தமிழர்களை இலங்கைப் படையினர் கொன்றதாக அய்.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரின்போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இலங்கை ராணுவத்திடம் சரண டைந்ததாகத் தெரிகிறது. அவர் களில் பலர் காணாமல் போன தாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதி எம்எஸ்எம். சம்சுதீன் முன்பு செவ்வாய்க்கிழமை விசா ரணைக்கு வந்தது.

அப்போது இலங்கை அரசின் தலைமை சட்ட ஆலோசகர் கே.எஸ்.ரத்னவேல் வாதிடுகை யில், “இலங்கை அரசால் அமைக் கப்பட்ட மறுவாழ்வு மய்யங் களில் சரணடைந்த விடுதலைப் புலிகளில் 8,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; சரண டைந்தவர்கள் காணாமல் போக வில்லை; அனைவருக்கும் புனர் வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி கூறுகையில், “சரணடைந்த விடு தலைப் புலிகள் குறித்த விவரங் களை வரும் 30-ஆம் தேதிக்குள் இலங்கை ராணுவம் சமர்ப்பிக்க வேண்டும்‘ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner