எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோலாலம்பூர், ஜன.5 மலேசியா நாட்டில் கனமழையால் ஏற்பட் டுள்ள வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, வீடுகளில் இருந்து 23 ஆயிரம் மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர்.

மலேசியா நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாநிலங்களில் ஆண்டு தோறும் பலத்த மழை பெய்வது வழக்கம். வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.

கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், அதன் அருகில் உள்ள டெ ரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரணம் முகாம்கள் மூலம் உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

நிறைய சாலைகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் சில இடங்களில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளது.

இருப்பினும் இந்த இரண்டு மாநிலங்களிலும் மழை வெள் ளத்தால் உயிரிழப்பு குறித்து இது வரை தகவல் எதுவும் வெளி யாகவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner