எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெஹ்ரான், நவ. 14-  ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலி யாகியுள்ளனர். மேலும் 6 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர். நூற்றுக்கணக் கானோர் இடிபாடுகளில் இன் னமும் சிக்கியிருப்பதாலும், காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பலரது நிலை கவலையளிக்கும் வகை யில் இருப்பதாலும் சாவு எண் ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இராக் நாட்டின் ஹலப்ஜா நகரில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பகுதியை மய்யமாகக் கொண்டு ஞாயிற் றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக் கடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவாகியிருந்தது. இந்நிலநடுக்கத்தின் தாக்கம், இர்பிள் முதல் இராக் தலைநகர் பாக்தாத் வரையிலும் உணரப் பட்டது. இதனால் அப்பகுதி களில் உள்ள வீடுகளும், கட் டடங்களும் பலமாக குலுங் கின. இதையடுத்து மக்கள் அல றியடித்துக் கொண்டு, வீடுகளை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர்.

இதேபோல், ஈராக்கின் அண்டை நாடான ஈரான், மத் தியதரைக் கடல் பகுதி ஆகிய வற்றிலும் நிலநடுக்கத்தின் தீவி ரம் உணரப்பட்டது. குறிப்பாக, ஈரான் நாட்டிலுள்ள ஹெர் மான்ஷா மாகாணத்தின் சர்போல் -ஏ-ஜஹாப் பகுதியில் இந்நில நடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஏராள மான வீடுகளும், கட்டடங்க ளும் இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளன. மேலும் பல வீடுகள் விரிசலடைந்து பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த இடிபாடுகளில் சிக்கி, 400 பேர் இறந்துவிட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நில நடுக்கத்தில் 6,603 பேர் காய மடைந்திருப்பதாக ஈரான் அரசு தொலைக்காட்சியின் செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஈராக் நாட்டில் நிலநடுக்கத்துக்கு 7 பேர் உயிரி ழந்துவிட்டதாகவும், 535 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 100 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இத னால், ஹெர்மான்ஷா மாகா ணத்தைச் சேர்ந்த மக்கள் பீதியு டன் வீடுகளை விட்டு வெளி யேறி, இரவு முழுவதும் வெட்ட வெளியில் தங்கியிருந்தனர்.

சர்போல்-ஏ-ஜஹாப் பகுதி யில் குடிநீர், மின்சாரச் சேவை கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி மற்றும் செல்லி டப்பேசி சேவையும் பாதிக்கப் பட்டுள்ளது. ஈரானில் 14 மாகா ணங்கள் நிலநடுக்கத்தால் பாதிக் கப்பட்டிருப்பதாக அய்எல் என்ஏ செய்தி நிறுவனம் குறிப் பிட்டுள்ளது.

ஈராக் பிரதமர் அய்தர் அல்-அபாதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இயற்கைப் பேரி டர் தொடர்பான துறைகள், சிவில் பாதுகாப்புப் படை குழுக்களுக்கு மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு வலி யுறுத்தியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner