எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்சிலோனா, நவ. 14- பிரிவினை சர்ச்சைக்கு உள்ளான ஸ்பெயி னின் காடலோனியா பகுதியை விட்டு சர்வதேச நிறுவனங்கள் வெளியேற வேண்டாம் என்று பிரதமர் மரியானோ ரஜோய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்பெயினின் காடலோனியா மாகாணத்தில் ஆட்சி புரிந்து வந்த பிரிவினைவாதக் கட்சி, அப்பகுதியைத் தனி நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை மாகா ணப் பேரவையில் அண்மை யில் நிறைவேற்றியது.

அதைத் தொடர்ந்து மாகாண அரசு கலைக்கப்பட்டு முக்கியத் தலைவர்கள் தேச துரோக குற் றத்தின் கீழ் கைது செய்யப்பட் டனர். ஸ்பெயினைவிட்டு ரகசி யமாக வெளியேறிய காடலோ னியா முதல்வர் பெல்ஜியமில் அரசியல் புகலிடம் பெற முயற்சி செய்தார். ஆனால் பெல்ஜியம் அரசு அவருக்கு அரசியல் புகலிடம் அளிக்க மறுத்துவிட்டது.

இதனிடையே, காடலோ னியா பகுதியில் நிலவும் அரசி யல் குழப்ப நிலையால், அங்கு தலைமையிடம் அமைத்துச் செயல்பட்டு வரும் சுமார் 2,400 நிறுவனங்கள் மாகாணத்தை விட்டு வெளியேற முடிவு செய் தன. இவற்றில் பல சர்வதேச நிறுவனங்களாகும்.

இந்த நிலையில், மாகாணத் தலைநகர் பார்சிலோனாவுக்கு பிரதமர் மரியானோ ரஜோய் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கூறியதாவது: காடலோ னியா என்பது ஸ்பெயினின் ஒருங்கிணைந்த பகுதி. சமீபத் திய அரசியல் குழப்பத்தை ஏற் படுத்தியவர்கள் ஒதுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் மீது சட் டப்படி நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு துறைகளில் காடலோ னியா பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. அதற்கு இங் குள்ள மக்களும் நிறுவனங்க ளும்தான் காரணம். தற்போ தைய அரசியல் சூழலால் பல நிறுவனங்கள் தங்கள் தலைமை யகங்களை ஸ்பெயினின் பிற நகரங்களுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளன. ஆனால் தற் போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு நிறுவனங் கள் காடலோனியாவைவிட்டு வெளியேறக் கூடாது. இங்கு இன்னும் சட்டத்தின் மாட் சிமை உள்ளது. ஸ்பெயின் அர சியல் சாசனத்துக்கு உள்பட்டு விரைவில் தேர்தல் நடைபெற வுள்ளது. பிரிவினைவாதிகளை மக்கள் நிராகரிப்பார்கள்.

தேசிய கண்ணோட்டமுள்ள வர்கள் மீண்டும் ஆட்சி அமைப் பார்கள். எனவே நாட்டின் வளத் துக்கும் அய்ரோப்பிய யூனிய னின் வளர்ச்சிக்கும் பங்களிப் பைச் செய்யும் நிறுவனங்கள் காடலோனியாவைவிட்டு வெளியேறாமல், தொடர்ந்து இங்கேயே செயல்பட வேண் டும் என்றார் அவர். கலைக்கப் பட்ட காடலோனியா மாகா ணப் பேரவைக்கான தேர்தல் டிச. 21-ஆம் தேதி நடைபெறவுள் ளது. பிரிவினைவாதத் தலைவர் கள் மீது தேசத் துரோக குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப் படும் என்று கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner