எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூயார்க், ஜன. 2- விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யம் உள்ளது. அங்கு பல் வேறு நாடுகளை சேர்ந்த விண் வெளி வீரர்கள் கட்டுமான பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு ரசியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த 6 வீரர்கள் 2 வாரங்களுக்கு முன்பு சென்ற னர். கடந்த 2 வார விண்வெளி பயணத்திற்கு பின்பு இவர்களது உடலில் ஏற்படும் மாற்றங் களை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி அவர்கள் விண் வெளியில் உடற்பயிற்சி செய் வார்கள். இதன்மூலம் விண் வெளியில் எப்படி எல்லாம் உடல் மாற்றம் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

மேலும் இந்த 6 விண்வெளி வீரர்களும் இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றுவார்கள். அதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை இவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் ஏற்படும்.

எனவே கணக்குபடி அவர்க ளுக்கு இன்று 16 தடவை புத் தாண்டு பிறக்கும். உலகிலேயே இதுபோன்ற சாதனையை இது வரை யாரும் நிகழ்த்தவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner