எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சியோல், ஜன. 3- போருக்குத் தேவையான அணு ஆயுதங் களை தயாரித்து குவிக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். இது சர்வதேச நாடுகளிடையே பதற் றத்தை மேலும் அதிகரித்துள் ளது. இதுதொடர்பாக ஆண்டுக் கூட்டத்தில் வடகொரிய மக்க ளுக்கு அவர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

வட கொரியா அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடு என்ற இலக்கை அடைந்து விட்டது. இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், போருக்குத் தேவை யான அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏராளமாக தயாரித்து குவிக்க வேண்டும். இதனை நாம் வேகமாக செய்து முடிக்க வேண்டும். இது காலத் தின் கட்டாயம் என்று அவர் அந்த உரையில் தெரிவித்து உள்ளார். வடகொரியா அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதை யடுத்து அந்த நாடு மீது அமெ ரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தடைகளை மீறி அந்த நாடு சென்ற ஆண்டு செப்டம்பரில் அதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையை நடத்தியது. இது, உலக நாடு களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலும் வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இவை எதையும் பொருட்படுத்தாத வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் அணு ஆயுதங்களை தயாரித்து குவிக்கும் பணிகளில் தொடர்ந்து உறுதியாக உள்ளார். இந்த நிலையில், அணு ஆயுதங் களை அந்த நாடு கைவிடும் வரையில் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை என் பது அர்த்தமற்றது என்பதில் அமெரிக்காவும் உறுதியாக உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner