எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லண்டன், ஜன. 3- பிரிட்டனில் பல அடுக்குக் கார் நிறுத்தகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 1,400 கார்கள் எரிந்து நாசமான தாக தகவல்கள் தெரிவிக்கின் றன. இதுகுறித்து ஊடகங்கள் தெரிவித்ததாவது:

லிவர்பூல் நகரின் மிகப் பெரிய பொது நிகழ்ச்சியரங்க மான “எக்கோ அரோனா’ வையொட்டிய 7 அடுக்குக் கார் நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த அரங்கத்தில் நடைபெறவிருந்த குதிரைப் பந்தயக் கண்காட்சியில் பங் கேற்கபதற்காக ஏராளமான குதிரைகள் கட்டப்பட்டிருந்த நிலையில், இந்தத் தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்தக் குதிரைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

எனினும், அரங்கத்துக்குள் பாதுகாப்பான இடத்துக்கு அந் தக் குதிரைகள் அப்புறப்படுத் தப்பட்டதால் அவை உயிர் தப்பின. எனினும், தீவிபத்து காரணமாக சுமார் 1,400 கார்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத் தில் யாருக்கும் காயம் ஏற்பட்ட தாகத் தகவல் இல்லை. கார்கள் எரிந்து போனதால் தங்கள் வீடு களுக்குச் செல்ல முடியாமல் தவித்த அந்தக் கார்களின் உரி மையாளர்களுக்கு, தற்காலிக தங்கும் முகாம்களை அதிகாரி கள் ஏற்படுத்தித் தந்தனர்.

தீவிபத்து நேரிட்டபோது, அங்கிருந்த இரு கார்களில் வளர்ப்பு நாய்கள் விடப்பட்டி ருந்ததாகவும், விபத்தைத் தொடர்ந்து அந்த இரு நாய்க ளும் பத்திரமாக மீட்கப்பட்ட தாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். தீக்கிரையான கார்களில் வேறு எந்த பிராணி களும் விடப்பட்டதாகத் தெரிய வில்லை என்று அவர்கள் கூறினர். தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தபோது, ஒவ்வொரு காராக வெடித்துச் சிதறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அந்த நிறுத்தகத்தில் இருந்த ஒரு காருக்குள் நெருப்பு ஏற்பட்ட தாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நெருப்பு மற்ற கார்களுக் கும் பரவியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner