எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வாசிங்டன், ஜன. 11- அமெரிக்க பொருட்களையே வாங்க வேண் டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில், எச்-1 பி விசாக்களை நீட்டிப்பதை தடுக் கிற வகையில், புதிய கட்டுப் பாடுகளை டிரம்ப் நிர்வாகம் கொண்டுவரப்போகிறது என அமெரிக்காவின் மெக்கிளாட்சி செய்தி நிறுவனம் கடந்த வாரம் தகவல் வெளியிட்டது.

இது அமெரிக்க வாழ் இந் திய தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு பேரிடியாக அமைந்தது. விசாக்களை நீட் டிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் ஏறத்தாழ 7 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் எச்-1 பி விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெ ரிக்க குடியுரிமை மற்றும் குடி யேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்து உள்ளது.

இதுபற்றி அதன் தலைமை செய்தித்துறை அதிகாரி ஜோனத் தான் விதிங்டன் ஒரு அறிக்கை யில் கூறுகையில்,  எச்-1 பி விசாக்களை வைத்திருப்பவர் கள், நாட்டை விட்டு வெளி யேறுகிற விதத்தில், எந்த ஒரு ஒழுங்குமுறை மாற்றத்தையும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு பரிசீலிக்கவில்லை. அப்படியே மாற்றம் கொண்டுவந்தால்கூட, அந்த மாற்றமானது எச்-1 பி விசாக்களை வைத்திருப்போர் நாட்டை விட்டு வெளியேறுகிற நிலைமையை உருவாக்காது. ஏனென்றால் 21-ஆம் நூற்றாண்டு சட்டம் விதி எண். 106(ஏ) (பி)படி, முதலாளிகள் ஓராண்டு ஊதிய உயர்வின் அடிப்படை யில், நீட்டிப்பு கோர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை வராது என்பது அமெரிக்க வாழ் இந்திய தொழில் நுட்பத் துறையினருக்கு நிம்மதி தருவ தாக அமையும்.

அதே நேரத்தில், அமெரிக்க பொருட்களையே வாங்க வேண் டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற அதிபரின் கொள்கையினை நடைமுறைப்படுத்துவ தற்கு வேலை வாய்ப்பு சார்ந்த விசாக்கள் தொடர்பான கொள் கைகளை முழுமையான ஆய்வு செய்கிறோம் என அவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner