எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லண்டன், ஜன. 12- இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது அமைச்சரவையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந் தியாவை சேர்ந்த  2 எம்.பி. களுக்கு துணையமைச்சர் பதவி கிடைத்து உள்ளது.

2 பேரில் ஒருவர், ரிஷி சுனக். மற்றொருவர் சுயல்லா பெர்னாண்டஸ்.

37 வயதான ரிஷி சுனக் இங் கிலாந்தில் பிறந்தவர். இன்போ சிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மரும கன். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித் துறை வழங்கப்பட்டு உள்ளது.

37 வயதான சுயல்லா பெர் னாண்டசும் இங்கிலாந்தில் பிறந்தவர்தான். கோவாவை பூர்வீகமாக கொண்ட பெண் தலைவரான இவர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆவார். இவ ருக்கு அய்ரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர் பான துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அய் ரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக நடந்த பொது வாக் கெடுப்பின் போது, அதற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தவர்கள் ஆவார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner