எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அல்கைர்ஸ், ஜன. 12- உலகி லேயே அதிக வெப்பம் நிலவக் கூடிய இடங்களுள் ஒன்று சகாரா பாலைவனம். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சகாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞா யிற்றுகிழமை முதல் கடு மையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

சுமார் 15 அங்குலம் உயரத் துக்கு பனிக்கட்டிகள் பாலை வனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம் பர் மாதத்திலும் இங்கு பனிப் பொழிவு ஏற்பட்டது. ஆனால் இம்முறை அதிகளவில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.  அய் ரோப்பிய பகுதியில் ஏற்பட் டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று இந்த பனிப் பொழிவுக்கு காரணமாக இருக் கலாம் என வானிலை மய்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner