எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வாசிங்டன், பிப். 8- பாதுகாப்பு விவகாரங்களுக்கு தவிர்த்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் பிறவகை பொருளாதார உதவி களை நிறுத்தவதற்கான மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் அறிமுகம் செய் யப்பட்டது.
பாகிஸ்தானுக்கு அளிக்கப் படும் அத்தகைய உதவிகள், பயங்கரவாதிகளுக்கு ராணுவ உதவிகளையும், உளவுத் தகவல்களையும் அளிப்பதற்கே பயன்படுத்தப்படுவதாக அந்த மசோதாவில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு தற்போது அளிக்கப்படும் ராணு வமற்ற நிதியுதவிகளை நிறுத்தி விட்டு, அந்தத் தொகையை அமெரிக்காவின் உள்கட்ட மைப்பு வசதிகளை மேம்படு வதற்காகப் பயன்படுத்தவும் அந்த மசோதாவில் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினா எம்.பி. மார்க் சான்ஃபோர்டு மற்றும் கென்டகி எம்.பி. தாமஸ் மாஸீ ஆகியோர் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினர்.

அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது, பயங்கர வாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நன்கு தெரிந்தே உதவிகளை அளித்து வருவதாக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அமெ ரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட இரட்டை கோபு ரத் தாக்குதலுக்குப் பிறகு, சுமார் 3,400 கோடி டாலரை (ரூ.21.8 லட்சம் கோடி) உதவித் தொகையாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 52.6 கோடி டாலர் (சுமார் ரூ.3,380 கோடி) உதவித் தொகை வழங்கியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner