எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டாக்கா, பிப். 9- வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெய ரால் இயங்கிவரும் அறக்கட் டளைகளுக்காக வெளிநாடு களில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர் கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத் தில் விசாரணை நடைபெற்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி யால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கலிதா ஜியா சார்பில் உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மறு விசாரணைக்கு உத்தரவிட முகாந்திரம் இல்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், கலிதா ஜியாவின் மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன் றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.  இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது.

இந்நிலையில், ஜியா அனாதை இல்ல அறக்கட்ட ளைக்கு முறைகேடாக 2.5 லட் சம் டாலர்கள் நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக் கின் விசாரணை முடிவடைந்த தையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, கலிதா ஜியா (வயது 72) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட தால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட் டுள்ளது. கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

கலிதா ஜியா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி டாக்காவின் அனைத்து பகுதி களிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner