எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டமாஸ்கஸ், மார்ச் 3- சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக் கும் இடையே சண்டை நடை பெற்று வருகிறது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. அங்கு நடந்து வரும் ராணுவ தாக்கு தல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் மரணமடைந்து இருக்கி றார்கள்.

அங்கு 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய அய்.நா. சபை யில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய சிரியா அரசு ஒப்புதல் அளித்தது. பல்வேறு கோரிக் கைகளுக்கு பின்பு இருதரப்பும் தினமும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதேபோல் வான்வெளி தாக்கு தல் நடத்தப்படமாட்டாது என ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால் தரைவழி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. முக்கியமாக கிழக்கு கவுட்டா பகுதியில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. அங்கு பாதிப்புக்குள்ளான மக் களுக்கு அய்.நா. உதவிப் பொருட்களை அனுப்பியுள் ளது. 5 மணி நேர போர் நிறுத்தம் போதவில்லை என வும், உள்ளே சென்று பாதிக்கப் பட்டவர்களை அடையாளம் காணவே நேரம் சரியாக இருக் கிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் மருத்துவ உதவிகளை சிரிய அரசு தடுத்து நிறுத்தி வைத்தி ருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. பல இடங்களில் தடுப் புகள் வைக்கப்பட்டு அனைவ ரும் திரும்ப அனுப்பப்படுகி றார்கள் என்றும், மக்களுக்கு பொருட்கள் கிடைக்க கூடாது என்று வேன்றுமென்றே இப் படி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மருத்துவ உதவிகள் கொண்டு செல்வதற்காக ரகசிய சுரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சுரங்கம் வழியாக சில நாட்கள் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் சுரங்கங் களையும் சிரியா அரசு மூடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் போராளிகள் சில சன்னி நாடுகளிடம் இருந்து உதவி பொருட்கள் வாங்குகி றார்கள். ஆனால் போராளிகள் அதை மிகவும் அதிக பணம் கொடுத்தால் மட்டுமே மக்க ளுக்கு கொடுக்கிறார்கள் இத னால் எந்த விதத்திலும் மக்க ளுக்கு உதவிப் பொருட்கள் சென்று சேர்வதில்லை. சிரியா வில் உதவிப் பொருட்களுக்காக பெண்கள் உடலுறவுக்கு கட் டாயப்படுத்தப்பட்டு வருவ தாக தகவல்கள் வெளியாகியுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner