எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாரிஸ், மார்ச் 3- அய்ரோப்பா வின் பெரும்பாலான பகுதிக ளில் கடும் குளிர் நிலவி வருகி றது. பனிப்புயல் மற்றும் கடும் பனிப் பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட் டன. மேலும் நூற்றுக்கணக் கணக்கான விமான சேவை களும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது.

கடும் குளிரால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. போலந்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள் ளனர். ஸ்லோவேகியாவில் 7 பேர் இறந்துள்ளனர். ஏழைகள், வீடற்றவர்கள், மற்றும் குடியே றிகள் இந்த மிகப்பெரிய பனிப் புயலால் பாதிக்கப்படுவார்கள் எனவும், முதியவர்கள், குழந் தைகள், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வரு பவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநிலை குறைபாடு உள்ளவர்கள் குளிர் தொடர் பான உபாதைகளுக்கு உள்ளா கும் ஆபத்து அதிகமாக உள்ள தாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

பனிப்புயல் காரணமாக அயர்லாந்தின் டப்ளின் விமான நிலையத்தில் அனைத்து விமா னங்களும் ரத்து செய்யப்பட் டன. இதேபோல் ஆம்ஸ்டர் டாம் ஷிபோல் விமான நிலை யத்திலும் பல்வேறு விமானங் கள் இயக்கப்படவில்லை. ஒரு புறம் பனிப்பொழிவினால் பொது வாழ்க்கை முடங்கியிருந்தா லும், சில பகுதிகளில் பொது மக்கள் பனிச்சூழலை உற்சாக மாக அனுபவித்து வருகின்ற னர். சில பகுதிகளில் அய்ஸ் ஸ்கேட்டிங் சக்கரங்களை அணிந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்வதையும் காண முடிகிறது. ஆனால், தண்ணீர் சரியாக உறை யாத பகுதிகளில் இவ்வாறு ஸ்கேட்டிங் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் வெப்பநிலை சிறிது அதிகரிக் கலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. இன்று பனிப்புயல் கடந்து செல்லும் வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்கு மாறு அயர்லாந்து பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner